தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

பேய் வேட்டை

அமெரிககாவில் மான் வேட்டையாடக் காட்டுக்குச் சென்ற ஒருவர் தான் அடர்ந்த காட்டுக்குள் இந்த உருவத்தைக் கண்டு படம் பிடித்ததாகக் கூறி வேட்டை நிகழ்வுகள் சம்பந்தமான ஒரு இணையத்தளத்துக்கு இந்தப் படத்தை அனுப்பி வைத்துள்ளார்.இந்த நபர் தன்னை அடையாளம் காட்ட விரும்பவில்லை. இந்தப் படத்தை எடுத்தபோது தான் பெரும் அச்சமடைந்ததாகவும், தடுமாற்றத்தில் தனது கமரா கூட உடைந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கமரா உடைந்தபோதும் அதிலிருந்த மெமரி கார்ட்டுக்கு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுப்பர்மேன் போல் காட்சியளித்த இந்த உருவம் காட்டுக்குள் மறைந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தக் காட்சியை இந்த இணையத்தளத்தில் பார்த்த பலரும் வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான ஒரு இணையத்தள விளையாட்டில் இந்த உருவம் காணப்படுவதாக ஒருவர் தெளிவாகக் கூறியுள்ளார்.
Share |

Get Live Score