தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

நாட்டின் பல பாகங்களிளும் மர்ம மனிதர்கள்

நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிறீஸ் பூதம் -கிறீஸ் யக்கா- என்ற மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த மர்ம மனிதர்கள் பற்றிய பல கதைகள் கூறப்படுகின்றது. அவற்றில் அரசியல் பின்னணியுடனும், மத பின்னணியுடனும் கதைகள் உலாவருகின்றது.
இன்னும் ஊடகங்கள் குறிப்பாக சிங்கள மொழி ஊடகங்கள் கிறீஸ் பூதம் -கிறீஸ் யக்கா- வார்த்தைகளின் ஊடாக கொடுத்த முக்கியத்துவம் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சமூக விரோத கும்பல்களை இவ்வாறான மர்ம மனிதர்களாக நடமாட ஊக்குவித்துள்ளது என்றும் கூறலாம். தினமும் இடம்பெறும் சாதாரன் சமூக விரோத நடவடிக்கைகள் அனைத்தும் இப்போது கிறீஸ் பூதங்களின் மர்ம நடவடிக்கையாக பார்க்கபடுகின்றது. ஆனாலும் நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிறீஸ் பூதம் என சந்தேகிக்கப்படும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாணம் ஹட்டன் பிரதேசத்தில் கிறீஸ் பூதம் -கிறீஸ் யக்கா- என சந்தேகிக்கப்படும் ஒரு குழு தலைமறைவாக இருப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து பதுளை மற்றும் ராகலை பகுதிகளில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதேபோன்று கல்கினை, அலவத்துகொட, அப்புத்தளை, தம்பேதன்னை பண்டாரவளை, வெலிமடை, பதுளை, பசறை, கொட்டகலை மற்றும் நாவலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாக தெரிவித்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில்  வரிப்பத்தான்சேனை, இறக்காமம், ஒலுவில், அக்கரைப்பற்று மற்றும் மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில் இத்தகைய மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் மர்ம மனிதன் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இறக்காமம் பிரதேசத்தில் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னணி மற்றும்  உண்மைத்தன்மை பற்றி எதுவும் தற்போது கூறமுடியாவிட்டாலும் இதில் ஒரு நன்மையையும் இருக்கிறது. சமூகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் என்று சந்தேகிக்க படுபவர்கள் பலர் பொதுமக்களினால் கண்காணிக்கப் படுவதுடன் பலர் கைதாகியும் உள்ளனர். தற்போது இந்த கிறீஸ் பூதம் கதை அனுராதபுரம், புத்தளம் ஆகிய பிரதேசங்களின் பின்தங்கிய கிராமங்களிலும்  பேசப்படுகின்றது .

மஸ்கெலியா, சாமிமலை, நோர்வூட், பொகவந்தலாவ, டிக்கோயா,  பூண்டுலோயா , மடகுபுர,லபுக்கலை,பகுதிகளிலுள்ள தோட்டங்களில் தொழிலாளர்கள் காலை நேரத்தில் வேலைக்குச் சென்றிருந்த போது திடீரென மர்ம மனிதர்கள் வந்துள்ளதாக வதந்திகள் பரவியதால் ஆண், பெண் தொழிலாளர்கள் பதறியடித்துக்கொண்டு வேலைத்தளத்திலிருந்து திரும்பி வந்துவிட்டார்கள்.

இவ்வாறு திரும்பி வந்த தொழிலாளர்கள் குழந்தை காப்பகத்திலிருந்தும், முன்பள்ளிகளிலிருந்தும் தமது பிள்ளைகளை தூக்கிக்கொண்டு பயந்த நிலையில் வீடுகளுக்குத் திரும்பியிருந்தார்கள்.


அதே  வேலை லிந்துலை தலவாக்கலை டயகம தோட்டங்களின் வேலைசெய்து கொண்டிருந்த பெண்களை தூக்கிச்சென்று முடிகளை வெட்டி கொண்டிருக்கும் சந்தர்பங்களில் மக்களின்  நடமாட்டத்தை கண்டு ஓடியுள்ளதையும் பிறகு அவர்களை பிடிக்கமுடியாமல் போய்விட்டதாகவும் பிரதேச வாசிகள்  கூறுகின்றனர்.


அதே வேலை பூண்டுலோயா பிரதேசத்தின் சீன் தோட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டுக்குச் சென்று தொண்டைப்பகுதியை காயப்படுத்தி உள்ளதையும் எம்மால் ‌அவதானிக்க முடிந்தது

இதற்கு பின்னால் யார் இருக்கின்றார்கள் எதிர் வரும் தினங்களில் சுடசுட தர காத்திருக்கின்றேன்.


Share |

Get Live Score