தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

குடும்ப ஒற்றுமை

குடும்பத்தில் உள்ள ஒவ்வொறு தாய் தகப்பனின் எண்ணமும் எமது குடும்பம் அமைதியானது ஒற்றுமைமிக்கது குடும்பங்களோடு இணைந்து வாழ்வோம் என்று இருக்க வேண்டும். இதை எப்படி உருவாக்குவது 

 • குடும்பத்தில் ஒரு வேளையாவது அனைத்து உறுப்பினர்களும் கலந்து உண்ண வேண்டும்.  உண்ண வேண்டம்.  உண்ணும் போது  டிவி பார்த்தல் வேண்டாம் சேர்ந்து  உண்ணும் குடும்பங்கள் இணைந்து வாழ்கின்றனர் என்று கண்டுபிடித்துள்ளனர்.ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் போது அன்புப் பிணைப்பு உருவாகிறது.
 • குடும்பத்துடன் வாரம் ஒரு முறையாவது வெளியில் சென்று வர ‌ வேண்டும்  முக்கியமாக பூங்கா, மலைப்பகுதிகள், கோயில்கள், இன்னிசை கச்சேரிகள், நூலகங்கள், போன்ற பல இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வர வேனுங்க
 • அத்தோடு குடும்பத்தின் ஒருவருடைய வெற்றியை எல்லோரும் கொண்டாட வேணுங்க வாழ்த்துக்களையும் பரிமாற வேணுங்க
 •  ஒருவருக்கு சங்கடமோ, தோல்வியோ வந்தால் அனுதாபத்துடன் தனிதனியாகச் சென்று பேசி ஆதரவு கொடுக்க  வேணுங்க அத்தோடு விட்டுவிடாமல் மீண்டம் வெற்றி பெற உற்சாகம் ஊட்டவேண்டும். 
 • முக்கிய மான தினங்களில் பெருநாட்களின்போது எங்கிருந்தாலும் வந்து கூடிக் கொண்டாட மறந்து விடாதிங்க.
 • உறவில் “தான்” என்ற ஈகோ வேண்டாம். போலிக் கௌரவம். மானம், ரோஷம் குடும்பத்தில் வேண்டாங்க மனம் விட்டு பேசித்  பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளுங்க
 • குடும்பத்துடன்  இணைந்து இறைவழிப்பாடு தியானம் செய்யுங்கள்
  இவை அனைத்தும் குடும்ப வாழ்வில் தினமும் கடைப்பிடித்தால் வாழ்வில் அமைதி நிலைத்திருக்கும்
  வாழ்கை என்றால் ஆயிரம் இருக்கும் அதில் இன்பம் துன்பம் சேர்ந்து இருக்கும்
 

Share |

Get Live Score