தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

இதுதானா 5sமுறை !

5s  முறை என்கின்றப்போது
 
sort----------------ஒழுங்கு 
stabilize---------நேர்த்தி
shine-------------தூய்மை
standardize----நியமம்
sustain---------முன்னெடுப்பு


கட்டம் - 1 (SEIRI)
விளங்கிக் கொள்வோம்,தேர்ந்தெடுப்போம்,தெரிந்தவற்றைத் தெரிவிப்போம்.
  • எத்தேவையும் அற்றவற்றை ஒரு இடத்தில் கோவைப்படுத்துவோம். பின்னர் அவற்றை அப்புறப்படுத்துவோம்.
  •  தற்போது அவசியமற்றதெனினும் சில வேளைகளில் பின்னர் தேவைப்படும் என கருதப்படுபவற்றை வேறாக்குவோம்.
  •  தினமம் முடியாவிட்டாலும் வருடத்திற்கொருமுறை, ஆறு மாததிற்கொருமுறையோ அல்லது 3 மாதத்திற்கொரு முறையோ தேவையானவற்றை வேறாக வைப்போம்.
  •  எப்போதும் தேவையானவற்றை மாத்திரம் (கை) அருகில் வைத்திருப்போம்.
  •  எம்மைச் சூழவுள்ள  யாவற்றையும் வகைப்படுத்துவோம்.
  •  எப்போதும் தேவையானவை மற்றும் தேவையற்றவைகளை வேறாக்கி வைத்திருப்போம்.
  •  விற்று பணமாக்க முடியாத காலாவதியான மற்றும் மெதுவாக செயல்படுகின்ற பொருட்கள் யாவற்றையும் அப்புறப்படுத்துவோம். சில நேரங்களில் தேவைப்படுபவை, சில வேலைகளில் தேவையாகும் எனக் கருதி வைத்திருப்பவை என தேவையானவற்றை வேறாக்குவோம்.
  •  சேரும் தேவையற்றவற்றை கிரமமாக அகற்றுவோம்.
  •  தேவையற்றவற்றை சேகரிக்க  இடத்தை ஒதுக்காது உடன் அவற்றை அகற்றுவோம். 

கட்டம் - 2 (SEITON)
உபகரணங்கள் - பற்றி ,ஒழுங்காக,முறையாக
  • மது அலுவலகத்தில், வேலைத்தளத்தில் உள்ள சகல கிளைகள், அறைகளுக்கும் இலக்கமிடவும், அலுமாரி,கபோட்,போன்றவற்றை இடத்துக்ககிடம் வைக்காது முறையாக வரிசையாக வைக்கவும். அந்த இடங்களுக்கு நல்ல வெளிச்சம்,காற்றோட்டம் கிடைக்கின்றதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  •  திசைகளைக் குறிக்கும் பெயர் பலகைகள் (Direction Boards) ஐ பொதுவான இடத்தில் பொருத்துவோம்.
  •  அலுமாரி,கபோட் போன்றவற்றின் உள்ளேயுள்ளவற்றைப் பற்றி சுருக்கமான பட்டியல் ஒன்றை அவற்றின் வெளிப்புறமாக ஒட்டவும் நன்றாக தெரியும் படி பெரிய எழுத்துக்களை பாவித்து லேபல் முறையில் யாவற்றுக்கும் பின்பற்றவும்.
  • இலகுவாக அறிந்து கொள்வதற்காக சகல கோவைகள், பெயர்ப்பட்டியல், உறைகள் என்பவற்றை வெவ்வேறு நிறங்களில் தயாரிப்போம். சாவி, பூட்டு ,பூட்டுச்சாவி ஆகியவற்றுக்கு நிறம் பூசும் முறையை பயன்படுத்துவோம்.
  • சகல விண்ணப்பப்படிவங்களையும் தனியான இடத்தில் சேகரிப்போம். அது திறந்த இடமாக இருந்தால் மிகவும் இலகுவாகும்.
  • மரத்தளபாடங்கள், படங்கள், அறிவித்தல்கள் ஆகியவற்றை ஒழுங்காக முறையாக வரிசையாக வைக்கவும்.பொயர் பட்டியல் முறையை பின்பற்றுவதன் மூலம் தேவையான இடத்தை மிகவும் இலகுவாக அடையாளம் காண முடியும்.
  • கலஞ்சியசாலையில்,அலுவலகத்தில் இருக்கும் சகலவற்றையும் கிரமமாக வரிசைப்படுத்தி வைப்போம்.
  • அபாயகர இடங்களுக்கு அதற்கான பெயர் பலகையை பொருத்துவோம்.
  • சகல சாவிகள்,குப்பை தொட்டி, வாகனங்கள், காகித தாள்கள், புத்தகங்கள், உபகரணங்கள் ஆகியவற்றிற்காக வெவ்வேறான இடங்களைத் அமைத்து அவற்றை குறித்த இடங்களிலே வைப்போம்.
  • மீண்டும் ஆற்ற வேண்டிய வேலைகளை வேறாக வைப்போம்.
கட்டம் -3 (SEISO)
எல்லா இடங்களிலும் எல்லா வேலைகளிலும் பரிசுத்தத்தை - அனைவரும் சிந்திப்போம்.
  • வேறு ஒருவரினால் செய்யப்படும்வரை இருக்காமல்,நாமே நமது சூழலை சுத்தப்படுத்துவோம்.
  • எமது சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற கருத்தை மனதில் கொள்ளுவோம். உதாரணமாக தொலைபேசியைப்  பாவித்ததன் பின் அதைச் சுத்தம் செய்ய பழகிக் கொள்வோம்.
  • சுத்தப்படுத்தும் செயற்பாடுகள் எமது  கடமையாகும் எனக் கருதி தினமும் செயற்படுவோம்.
  •  சுத்தம் செய்யும் செயற்பாடுகளுக்கு முகாமைத்துவத்தின் சகல அலுவலர்களும் பங்கு கொள்வதுடன் கிரமமாக அது எமது பிரிவில் செயற்படுகிறதென திருப்திப்பட வேண்டும். முகாமைத்துவத்தின் உயர்மட்ட உத்தியோகத்தர்களும் இதற்காக பங்களிப்பதுடன் முன்மாதிரியை பெற்றுக்கொடுக்க  வேண்டும்.
  • பாவனைக்குதவாவற்றை அதற்கான தொட்யில் மட்டும் போடுவோம்.
  • தூசு,குப்பை போன்றவை உள்வரும் வழிகளை இனங்காணுவோம். அவ்வாறான வழிகளை தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுப்போம்.அதன் ஊடாக சுத்தம் செய்யும் முறையை மிகவும் இலகுவாக ஆற்றலாம் என புரிவோம்.
கட்டம் - 4 (SEIKETSU)
எமது சுற்றுப்புறங்களில் உள்ளவற்றை முறையாகவும், சுத்தமாகவும் பேணும்போது,வேலை செய்யும் எந்த நேரமும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
  • பொருட்களுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைக்கேற்ப தயாரிக்கப்பட்ட பட்டியலொன்றை வைத்திருப்போம்.
  • பெருமதிக்கேற்ப அலுவலகத்தின் ஒவ்வொறு பகுதியையும் வகைப்படுத்துவோம். 
  •  சகல   5sசெயற்பாடுகளையும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தரத்தினடிப்படையில் செயற்படுத்துவோம்.
  •  ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவுகளுக்கேற்பவும்,வடிவங்களுக்கேற்பவும் பொருட்களைத் தரப்படுத்துவோம்.
  •  பல்வேறு இடங்களிலும் ஓரே செயற்பாட்டுக்காக பயன்படுத்தும் பொருட்கள்,உபகரணங்கள் என்பவற்றை ஓரே தரத்தினதாகும்( ஓரே பரிமானம்,ஓரே அளவு, ஓரே நிறத்தில்.) தயாரிப்போம். (உதாரணமாக: மேசை,கதிரை, அலுமாரி, கபோட்,திரைச்சீலை,கழிவுபோடும் கூடை) 
  • சகல முறையையும் தரப்படுத்துவோம்.
  • குழாய், பூட்டு  போன்றவற்றை வேறுவேறாக இனங்காண்பதற்காக நிறமுறைமையை பின்பற்றுவோம்.
  • ஒவ்வொறு பொருளிளதும் ,உபகரணத்தினதும் நடாத்து முறையைச் சேர்த்துக்கொள்வோம். தூர நோக்கு நிருவாக முறையைச் சேர்ப்போம்.
  • எப்போதும் பரிசோதிப்பதற்கான பட்டியலை தயார் செய்து, அந்தப் பட்டியலின்படி பரிசோதனை செய்ய பழகுவோம்.
கட்டம் -5 (SHITSUKE)
பயிற்சியும் ஒழுக்க நெறிக் கல்வியும் 
  • 5s இன் மகிமையை யாவருக்கும் சொல்லிக் கொடுப்போம்.
  • 5s முறைக்குரிய புபை்படங்களை யாவருக்கும் தெரியும்படி வைத்திருப்போம்.
  • 5s உற்சாகமளிக்கக் கூடிய சொற்களை முன்மொழிதல், போஸ்டர், நாடகப்போட்டி ,வீதிநாடகங்கள், போன்றவற்றை ஏற்பாடு செய்தல்.
  • 5s பற்றி நியம மதீப்பீட்டைக் கிரமமாக செயற்படுத்தல்.
  •  யாவரும் பங்குகொள்ளக்  கூடியவகையில் தயாரிக்கப்பட்ட 5s கலாசாரத்தை நிறுவனத்துள் ஏற்படுத்தல்
  •  நிறுவனத்தில் ஒவ்வொறு பிரிவுகளுக்கிடையில்  5s போட்டிகளை நடாத்துவதன் மூலம் அதற்காகவுள்ள கருத்தை அதிகரித்தல்.
  • 5s  முறை எப்போதும் செய்ய வேண்டிய வெலை என ஆக்கிக்கொண்டால் எல்லாமே நேர்த்தியாக பேணப்படும் என்பதில் எவ்வித ‌ஐய்யபாடும் இல்லை என்பதனை நானாகிய சுபாஷ் உங்களுக்கு அன்பாக தெரிவித்துக் கொள்கின்றேன்.    

Share |




Get Live Score