தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.
மைக்ரோ சாப்டுவேர் பில்கேட்ஸ் பற்றி சமீபத்தில் ஒரு செய்தி. யாவரும் தெரிந்து இருக்கலாம். அல்லது அது கண்ணில் படாமல் போய் இருக்கலாம். ஆனால் என்னுள் அந்த விதைகள் ஊறிக்கொண்டே இருக்கின்றன. என்னை எழுதச் சொல்லி நெருடிக் கொண்டே இருக்கின்றன.எப்படி அன்னை தெரஸா தனது சிறு வயதிலேயே இந்தியா சென்று மீச்சிறு மானிடங்களுக்கு தனது ஆயுளை அர்ப்பணிக்க வேண்டும் என்று கனவு கண்டாரோ அப்படி எல்லாம் இல்லாமல் ஆனால் அவருக்கு இணையான சாதனையை பில்கேட்ஸ் குடும்பமும் செய்து வருவது மனித குலம் யாவராலும் பாரட்டப்பட வேண்டியது.
நான் சொல்வது அவரின் கணினி உலக சாதனையைப் பற்றியோ அவரின்  உலகின் முதல் பணக்காரர் என்பது பற்றியோ அல்ல. அதைபற்றி எல்லாம் நிறைய எல்லாம் செய்திகள் வருவது அனைவரும்  அறிந்ததே.அவர் ஆல்பிரட் நோபெல் மாதிரி தனது சம்பாதனை எல்லாம் இம் மனித குலத்திற்கு பெரிதும் பயன்படவேண்டும் என்று செய்து வரும் சாதனை பற்றியதே.
பகவத் கீதையில் சொல்வது மாதிரி”எல்லாம் நமக்கு உலகிலிருந்தே கிடைத்தது; கிடைத்ததை உலக மேன்மைக்கே-நன்மைக்கே செலவு செய்து செல்வோம்” என்ற சிந்தனையில் தனது 34பில்லியன் வருமானத்திலிருந்து இதுவரை சுமார் 18 பில்லியன் இவ் உலகின் ஏழைக்குழந்தைகள் உயிர் பிழைப்பதற்காக தடுப்பு மருந்து கொடுக்கும் பணியில் செலவிட்டு இருப்பதாகவும் அதன் மூலம்  இதுவரை சுமார் 250 மில்லியன் குழந்தைகளுக்கு பயன்பட்டு உயிர் பிழைத்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் சொல்கின்றன.அதுவும் முற்றிலும் இந்தியா ; ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே அதிக கவனம் எடுப்பதாக சொல்லியுள்ளது நமக்கெல்லாம் ஆச்சரியமூட்டும் செய்தி.
ஒபாமா நமது நாட்டையும் காந்தியையும் நேசிப்பதாக சொல்லியபோதும் தனது நாட்டை வலுப்படுத்த இந்திய நாட்டின் இளஞர்க்கு வேலை வாய்ப்பில் கல்தா கொடுத்து புளியைக் கரைத்து  வரும்பொது பில்கேட்ஸின் நடவடிக்கை நமது நெஞ்சில் பாலை வார்த்திருக்கிறது.உலகின்1960 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு சுமார் 20 மில்லியன் குழந்தைகள் சரியான தடுப்பு மருந்தின்றியும்; ஊட்டச்சத்தின்றியும் பிறந்த குறைந்த பட்ச காலத்திலேயே இறந்து வருவதை தற்போது ஏறத்தாழ தனது உபகாரத்தின் மூலம் 8- 9 மில்லியன் குழந்தை இறப்பாக குறைத்து வருவது சாதனை இல்லையா.சுமார் 11 மில்லியன் அதாவது நமது இந்தியக் கணக்கில் ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி குழந்தைகளின் இறப்பை தடுத்து வருகிறார் என்பதை சாதாரணமாகக் கருத வழியில்லை.
ஒபாமாவுக்கு கொடுத்த நொபெல் பரிசை உண்மையில் இவருக்குத்தான் கொடுத்திருக்கவேண்டும். அடுத்து அதைவிட முக்யமானது: மிக்க புகழ் உள்ளவர் யாவரும் ஒன்று பிள்ளை இல்லாதவராக அல்லது பெண்பிள்ளைகள் உடையவராக-ஆண் வாரிசு இல்லாதவராகவெ இருப்பதை பார்க்கலாம். நானறிந்த சிலரை எடுத்துக்காட்டாக இங்கு: எம்.ஜி.ஆர்-பிள்ளை இல்லை. ரஜினி- 2ம் பெண்களே. கமல்- 2ம் பெண்கள், கலாம்,வாஜ்பாய்- திருமணமே இல்லை.ஒபாமா- 2ம் பெண்கள்; பெரியார்-குழந்தை இல்லை. காமராஜ்-திருமணமே இல்லை. இன்னும் சொல்லலாம்.
ஆனால் பில்கேட்ஸிக்கு ஆணும் பெண்ணுமாய் 3 குழந்தைகள் . ஆனால் இவரும் இவர் மனைவி-மெலிண்டாவும் தனது பிள்ளைகளுக்கு பெரும்பகுதி செல்வத்தில் பங்கு இல்லை. அவர்களுக்கு வாழ்க்கைகு வசதிக்கு கொஞ்சம் ஒதுக்கிவிட்டு; தனது செல்வத்தின் பெரும்பகுதியை இது போன்ற தர்ம சாதனைக்கே உலகில் இந்தியா; ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு செலவிட உதவுவதாக சொல்லியிருப்பது பற்றி பாராட்ட வார்த்தை இல்லை.
இவர்களைப் பின்பற்றி உலகில் உள்ள தலைசிறந்த பணக்காரர் எல்லாம் மாறினால் உலகு எப்படி இருக்கும்? மனிதகுலம் ஒரு குறைவின்றியும் இருக்குமே என்று கற்பனை செய்து பார்க்கவே எவ்வளவோ உள்ளம் மகிழ்வடைகிறதே.
Share |




Get Live Score