தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

true friendship ,உண்மையான நண்பர்கள்

உலகத்தில் எத்தனையோ ‌ ஜீவராசிகள் உயிர் வாழுகின்றன அவற்றின் ஒவ்வொறு ஜீவராசிகளுக்கும்  ஒவ்வொறு இயல்பை கடவுள் படைத்துள்ளான்  
அந்த ஜீவராசிகளில்  ஒன்றுதான் எங்களுடைய நட்பு  காலத்தால் அழியாத சுவடுகள் என்றுதான் எங்களுடைய நட்பை சொல்ல வேண்டும். வெறுமனே நட்பெனும் போர்வைக்குல் புகுந்து  ஊரையும்,மானத்தையும் ஏமாற்றும் இவ்வுலகத்தில் எங்களுடைய நட்பு   இவ்வுலகத்திற்கு எடுத்துகாட்டான புனிதமான நட்பெனும்  சூவாலையைதான் வீசிக்கொண்டு இருந்தன.....

           பல கெட்ட,நயவஞ்ஞககாரர்கள் எங்களுடைய நட்பை கொஞ்சைப்படுத்தியும், பிரிக்கவும் பார்த்த காலத்தை நினைக்கும் போது என் மனதில் பெரிய பூகம்பம் வெடித்து சிதறுவதை போல் என்னால் ஊகிக்கமுடிகின்றது. நாங்கள் சேர்ந்து செல்லுகின்ற பாதை வழியெல்லாம் நண்பர்கள் சிலர் ஏன் வயது வந்தவர்கள் கூட தப்பான கண்னோட்டத்தினிலே எங்களை பார்த்தார்கள் எங்களை பற்றி விமர்சிப்பார்கள் எங்களின் மனம் நோகும்படி  புறம்சொல்வார்கள். எங்களுடைய நட்பு எதையும் கண்டுகொள்ளாது தனது ஓரே பாதையில் சென்றதை நினைக்கும் போது இன்னும் என் மனதை பசுமைப்படுத்துகின்றது.

எங்களுடைய நட்பு இவ் பாமர மக்களின் சூதாட்டத்தினால் மேலும் உயிர்பெற்றது எந்த தடைகள் வந்தாலும் எதர்க்கும் அஞ்ஞாமல் வீருநடை போட்டது. எனது நட்பிற்கு அத்திவாரம் என்று போடப்பட்டதோ அன்றில் இருந்து எனது வாழ்க்கையில் பல மாற்றத்தினை தெளிவுப்படுத்திக்கொண்டேன் மனிதனுடைய வாழ்க்கை அரசியல் அறிஞர் அரிஸ் டோட்டில் குறிபிட்டது போல  காட்டுமிறாண்டிதனத்தை விட்டு நல்ல பல பண்புகளை என் நட்பிடம் பெற்றேன்.

அதன்மூலம் சென்றஇடமெல்லாம் வெற்றியும்,சிறப்பும் கிடைத்தது  எங்களுடைய நட்பில் மிகவும் பிடித்தமான பல விடையங்கள் உள்ளன அதில் ஒன்றுதான் சந்தர்ப்பம் கிடைக்கும் போது உணவை பரிமாரிக்கொள்வது இந்த சந்தர்பம் எப்பொழுது வரும் என்ற எதிர்பார்போடு ஏங்கிய காலப்பகுதியும் என்னுல் உண்டு.

இவ்வாறு பல காலமாக எங்களுடைய நட்பு உருண்டுஓடியது  ஒருநாள்  என்னுடைய மாமன் மகளுடன் காதல் வயப்பட நானும் என்காதலை வெளிப்படுத்த காதல் ஓருபக்கம் நட்பு ஒருபக்கம் என்னுடைய வாழ்ககையின் சந்தோஷத்தை கொடுத்தது.

இவ்வாறு எனது நட்பு செல்லுகின்றப்போது  பொறுக்கமுடியாத எமது சமூக பாமர மக்களும் சில நயவஞ்ஞக நண்பர்கூட்டமும்  எனது நட்புக்கு எனது காதலை துரும்புசீட்டாக வைத்துகொண்டு விளையாட ஆரம்பித்தார்கள். காலம் என்னை கேள்வி கேட்க ஆரம்பித்தது. பெற்றோர் என்னை  துயரப்படுத்தவில்லை என் நட்பின் பெற்றோரும் என்னை துயரப்படுத்தவில்லை  ஊர் பலதும் சொல்லும் அதை ஏன் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற என்னக்கருவை விட்டு அகலாமல் செவ்வனே இருந்தார்கள்.

இவ்வாறு இருக்கும் போது எனது காதலுக்கு வந்த பெரிய இடைவெளியை கண்டு என் நட்பு என்னை விட்டு பிரிய நேரிட்டது. அந்த பிரிவைதான் என்னால் ஈடுசெய்யமுடியாமல் வேதனையில் தவித்துக்கொண்டு இருக்கின்றேன். இன்பத்திலும் துன்பத்திலும் நட்பு கூடவே இருக்கவேண்டும் என்பார்கள்  ஆனால்  என் நட்பின் திருமணத்திற்கு கூட செல்லாத வக்கத்தவனாக நான் இருந்தேன்.....

வாசகர்களே இவ்வளவு நேரம் நீங்கள் வாசித்ததில் கொடுக்கப்பட் விடயத்தில் நட்பு என்ற வார்த்தையைதான் உபயோகித்தேன் அந்த நட்பானது ஆணா அல்லது பெண்ணா என்ற  கேள்விக்கு இப்பொழுது விடை தெரிந்திருக்கும் என நான் நம்புகின்றேன். நட்பால் பிண்ணப்பட்டது ஒரு பெண்ணிடம்தான் அதனால் தான் சமூகம் எங்களை உதாசீனம் பன்னியதுமட்டுமல்லாது எங்களுடைய நட்பையும் பிரித்தது.

அன்பின் நண்பர்களே தயவு செய்து நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது ஆண் நண்பர்களை தேர்ந்தெடுங்கள் ஏன் என்றால் நாம் சமூகத்தின் கேள்விக்கு பதில் சொல்லும் கட்டாயத்தினில் உள்ளோம்.
எது எப்படி இருந்தாலும் என்றும் என் நட்பு என்மனதை விட்டு நீங்காது  என்றும் அழியாது.  

my best and first friend kala
எனக்காக கொஞ்ஞம் நேரத்தை ஒதுக்கி வாசித்தமைக்கு நன்றிதனை கூற கடமைப்பட்டுள்ளேன்.
என்றும்
அன்பின்
சுபாஷ்





Share |




Get Live Score