தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.


why this kolaveri di

சமீபத்தில் வெளியான கொலைவெறி டி என்ற பாடல் யூடியூபில் சக்கை போடு போட்டு கொண்டு இருக்கிறது. இது வரை மட்டுமே பார்வையாளர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டி விட்டது.  யூடியுப் தளமும் தங்க மெடல் கொடுத்து கவுரவித்தது. ஒரு தமிழ்(தங்லிஷ்) பாடல் யூடியூபில் இந்த அளவு பார்க்க பட்டிருக்குமா என்பது சந்தேகமே. இந்த பாடலுக்கு இவ்வளவு வரவேற்ப்பு இருப்பினும் சோனி நிறுவனம் வெளியிட்டதால் தாள் தான் இந்த வரவேற்ப்பு என்ற கருத்தும் இருக்கிறது. எப்படியோ இன்றைய இளைஞர்களின் தேசிய கீதமாக இந்த பாடல் மாறி இருக்கிறது. இவ்வளவு மகுடங்களை பெற்ற இந்த பாடல் அடுத்ததாக ஒரு சாதனையை செய்ய இருக்கிறது.

ஏர்டெல் நிறுவனம் 2011 ஆம் ஆண்டின் ஒரு வருடத்திற்கான(Airtel mobitude 2011) உபயோகத்தினை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 150 மில்லியன் பாடல்கள் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளதாம். அதில் வெளியிட்ட 18 நாட்களில் கொலைவெறி டி பாடலை 2,10,000 பேர் ஏர்டெல் மொபைல்களில் இருந்து டவுன்லோட் செய்துள்ளனர். சமீபத்தில் ரா-ஒன் படத்தில் வெளியான Chammak challo என்ற பாடல் தான் 2011 இல் அதிகம் டவுன்லோட் செய்யப்பட வீடியோ பட்டியலில் முதல் இடத்தில உள்ளது.

ஆனால் வெளியான 18 நாட்களில் இவ்வளவு பேர் டவுன்லோட் செய்திருப்பதாலும், இந்த படம் ரிலீஸ் ஆகிவிட்டால் இதன் எண்ணிக்கை பல மடங்கு கூடும் என்ற நம்பிக்கையிலும் கொலைவெறி டி பாடல் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட வீடியோக்கள் பட்டியலில் சுலபமாக முதல் இடத்தை பிடித்துவிடும். மற்றும் இதர அதிகம் டவுன்லோட் செய்யப்பட்டவை.


புகைப்படங்கள் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட நடிகைகளின் பட்டியல்:

 1. காத்ரீனா கைப்
 2. தீபிகா படுகோனே
 3. கரீனா கபூர்
 4. ஜாக்லீன் பெர்னாண்டஸ்
 5. பிரியங்கா சோப்ரா
புகைப்படங்கள் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட நடிகர்களின் பட்டியல்:
 1. ஷாருக் கான்
 2. சல்மான் கான்
 3. ஷாகித் கபூர்
 4. இம்ரான் கான்
 5. ஜான் ஆப்ரகாம்
அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட பாடல் வீடியோக்கள் பட்டியல்:
 1. சமாக் சல்லோ
 2. திங்கா சிக்கா
 3. செனோரீட்டா மகர் பிர் பி
 4. சோர்க்கா சக்தே ஹயே     
 5. டேரி  மெரி மெரி டேரி 

 கொலைவெறி டி பாடலை கீழே உள்ள பாடலை கண்டு களிக்கலாம்.1500 க்கு அதிகமான படங்களை பார்வையிட

இயந்திரம் போல் ஆகிவிட்ட மனித வாழ்க்கையில் சினிமாக்கள் தான் மிகப்பெரிய பொழுது போக்கு அம்சமாக மாறிவிட்டது. ஏதாவது ஒரு பண்டிகையா அல்லது விசேஷ நாட்களோ வந்தால் எந்த டிவியில் என்னென்ன படம் போடுராங்கன்னு தான் முதலில் பார்ப்போம். அந்த அளவு டிவியும் திரைப்படங்களும் நம்மை அடிமை படுத்தி விட்டது என்று கூட கூறலாம். Youtube பற்றி அனைவரும் அறிந்து இருப்போம் இணையத்தில் வீடியோக்களை கண்டு ரசிக்க கூகுள் நிறுவனம் வழங்கும் சேவையாகும். தற்பொழுது youtube தளத்தில் வீடியோக்கள் மட்டுமின்றி முழு நீளத் திரைப்படங்களையும் கண்டு ரசிக்கலாம். இந்த youtube தளத்தில் 1500 இந்திய திரைப்படங்களை இலவசமாக காணலாம். ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மராத்தி, குஜராத்தி இப்படி பல மொழிகளில் திரைப்படங்கள் காணப்படுகிறது.


இந்த சேனலில் ஹிந்தி மொழியில் தான் அதிக அளவு திரைப்படங்கள் காணப்படுகிறது. தமிழில் 50க்கும் அதிகமான திரைப்படங்கள் காணப்படுகிறது. இந்த youtube சேனலில் கீழே உள்ள பல்வேறு வகைகளில் திரைப்படங்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளது.
 • New Releases
 • Action & Adventure
 • Animations & Cartoons
 • Classics
 • Comedy
 • Crime
 • Documentary
 • Drama
 • Family
 • Foreign Film
 • Horror
 • Indian Cinema
 • Mystery Suspense
 • Romance
 • Science Fiction
இந்த Youtube சேனலில் நாளுக்கு நாள் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. 

மொத்த திரைப்படங்களை காண - All Movies
தமிழ் திரைப்படங்களை மட்டும் காண - Tamil Movies Only

இந்த தகவல் பிடித்து இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டையில் ஓட்டளித்து செல்லுங்கள்.உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க

சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.

 • இதற்க்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட அக்கௌன்ட்டை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். 
 • பிறகு இந்த லிங்கில் கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
 • வரும் விண்டோவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். 
 • அந்த விண்டோவில் உங்கள் அக்கௌன்ட்டை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்).
 • ஈமெயில் ஐடியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள். 
 • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நீங்கள் கொடுத்த ஈமெயில் ஐடியில் உள்ள பேஸ்புக் கணக்கை காட்டும்.
 • உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த பாஸ்வேர்டை அந்த இடத்தில் கொடுக்கவும். 
 • பாஸ்வேர்டை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும்.
 • அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.
 • உங்களுக்கு இன்னொரு Pop-up விண்டோ ஓபன் ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
 • இப்பொழுது புதிய பாஸ்வேர்டை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் அக்கௌன்ட் திரும்ப பெறப்படும். 
இனி நீங்கள் உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட்டை எப்பொழுது போல உபயோகிக்கலாம்.

இந்த தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அனைவரையும் சென்றடைய உதவுங்கள். வசதியான Comment Replyவெகு நாட்களாக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த வசதியான Comment Reply வசதி பிளாக்கரில் வந்துவிட்டது. பிளாக்கரில் இது வரை குறையாக இருந்து வந்த இந்த வசதியை பிளாக்கர் தளம் வெளியிட்டுள்ளது. வேர்ட்பிரசில் உள்ள கமென்ட் சிஸ்டம் போலவே நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும்
Reply அழுத்தி அவருடைய கேள்விக்கு கீழேயே பதில் போடலாம்.
Reply வசதியை ஆக்டிவேட் செய்ய: 

முதலில் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து Settings - Other - Blogfeed - Full என வைக்கவும். 
(பழைய தோற்றத்தை உபயோகிப்பவர்கள் Setting - Sitefeed சென்றால் இந்த வசதியை காணலாம்)
அடுத்து நீங்கள் Embeded கமென்ட் பாக்ஸ் உபயோகிக்க வேண்டும். Popup விண்டோ வைத்திருப்பவர்கள் Embeded Comment Box வைத்து கொள்ளவும். அதற்க்கு அதே பகுதியில் Posts and Comments என்ற லிங்கை அழுத்தி இதனை தேர்வு செய்து கொள்ளலாம்.
(பழைய தோற்றத்தை உபயோகிப்பவர்கள் Settings-Comments - Comment form placement சென்று இந்த வசதியை பெறலாம்)
Embeded முறையை தேர்வு செய்த பின்னர் மேலே உள்ள Save Settings என்பதை கொடுத்து சேமித்து கொள்ளுங்கள். 
Thanks: Blogger Buzz
Note1: பிளாக்கர் நிறுவனம் அறிவித்த செட்டிங்க்ஸ் இவ்வளவு தான் அதை நாம் செய்தாச்சு ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இந்த வசதி இன்னும் வரவில்லை. இப்பொழுது தான் வசதியை வெளியிடப்பட்டது என்பதால் அனைத்து பிளாக்கில் அப்டேட் ஆக கொஞ்ச நேரம் எடுக்கலாம். ஆகவே வசதி வரும் வரை பொறுத்திருப்போம். மற்றும் இதற்க்காக வேறு ஏதேனும் தீர்வு இருந்தாலும் பதிவில் உடனடியாக அப்டேட் செய்யப்படும்.
Note2: இந்த வசதிக்காக இவ்ளோ நாள் பொருத்தாச்சு இன்னும் கொஞ்ச நேரம் பொருக்க மாட்டோமா? மற்றும் இந்த வசதி யாருக்கேனும் வந்தால் கமேண்டில் தெரிவிக்கவும்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

........................UPDATE......................
கந்தசாமி சார் தகவலின் படி அவருடைய பிளாக்கில் இந்த வசதி வதுள்ளது. பிளாக்கர் தளத்தின் டீபால்ட் டெம்ப்ளேட் உபயோக்கிரவர்களுக்கு இந்த வசதி உடனே வருகிறது என நினைக்கிறேன். மூன்றாவது நபர்களின் டெம்ப்ளேட் உபயோகிக்கிறவர்களுக்கு தாமதமாகலாம். ஏதேனும் ட்ரிக்ஸ் இருந்தால் விரைவில் அப்டேட் செய்யப்படும்.
Share |

Get Live Score