தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

(படித்ததில் சுவைத்தது) கண்டுபிடியுங்கள்.

துப்பறியும் விளையாட்டு விளையாட உங்களுக்கு ஆவலாக உள்ளதா? இந்த விளையாட்டு உங்கள் மூளைக்கு சவால் விடுவாதாக உள்ளது. கொலைசெய்யப்பட்ட இடத்திலிருந்து ஒவ்வொரு குளுவாக நீங்கள்கண்டுபிடிக்கவேண்டும்.420 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுடைய பெயரை தட்டச்சு செய்யுங்கள்..வேறு ஏதாவது மாற்றங்கள் தேவையிருப்பின் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
ஒவ்வொரு இடத்திலும் உங்களுக்கு ஒவ்வொரு பொருட்கள் கிடைக்கும். அந்த பொருட்களை கொண்டு வேறு ஒரு இடத்தல் இருந்து வேறு பொருளை எடுப்பற்கான லிங்க் கிடைக்கும்.
உங்களுக்கு உதவுவதற்காக உதவிக்குறிப்பும் உங்களுக்கு உள்ளது.
ஒரு அழகிய நகரம்.அதன் அருகே கடல். கடலில் உள்ள கப்பலில் இருந்து வென்னிற புகை நகரத்திற்கு பரவுகின்றது. அதனை சுவாசிக்கும் மனிதர்கள் முகம் மாறி அருபமாக மாறிகோமா நிலைக்கு சென்றுவிடுகின்றனர்.ஆனால் அந்த நகரத்தில் உள்ள ஒருவன் மட்டும் எந்த ஓரு பாதிப்பும் இல்லாமல் இருக்கின்றான்.அவன்தான் வில்லன் என்று சொல்லவும் வேண்டுமா?நாம் அந்த நகரத்திற்கு சென்று ஒவ்வொரு கூளுவாக கண்டுபிடிக்கவேண்டும்...வில்லனை அழித்து அந்த கப்பலையும் அழிக்க வேண்டும்.அதில் இடம் பெற்ற ஒரு கூளு சொல்லுகின்றேன்.ஒரு இடத்தில் பள்ளத்தில் சாவி விழுந்துவிட்டது. அந்த சாவியை எடுக்க வேறு இடத்தில் கொம்பு இருந்தது. வேறு ஒரு இடத்தில் கயிறு இருந்தது.வேறு ஒரு இடத்தில் பப்புள்காம் இருந்தது. இந்த மூன்றையும் எடுத்து கொம்பில் கயிறை கட்டி அதன் நுனியில் ப்பபுள்காமை ஓட்டி அதன் மூலம் பள்ளத்தில இருந்து சாவி எடுத்து அறையை திறக்கவேண்டும. அங்கு உங்களுக்கு அடுத்த லெவலுக்கான குறிப்பு இருக்கும.பின்னணி இசை பயங்கரமாக உள்ளதால் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தனியே விளையாட விடவேண்டாம்.பயப்பட போகின்றார்கள்.

(படித்ததில் சுவைத்தது) டெக்ஸ்டாப்பில் மீண்டும் ஒரு விளையாட்டு


 இதில் மொத்தம் 9 டூல்கள் உள்ளது.
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
இது வெறும் 1.5 எம்.பி அளவுதான். இதை பதிவிறக்கி
இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும
இப்போது உங்களுக்கு இந்த பெட்டியை சுற்றி 9 டூல்கள்
வந்திருக்கும். முதலில் உள்ள இந்த மனிதரை
பார்க்கலாம்.
THEODORE THUMB :-இந்த ஆளை
பிடித்து இழுப்பதன் மூலம் டெக்ஸ்டாப்பில்
வேண்டிய பகுதியானது ரப்பராக இழுத்து வரும்.
RID & PID THE GRAIDY KIDS:- பொம்மைகள் இரண்டு
குண்டுவீசி தானே விளையாடிக்கொண்டு இருக்கும்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.

SPACE CRUSIER ATTACK:-விண்கலம் குண்டு வீசி
தாக்கும்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.

FOTON THE DESKTOP HERO:- சும்மா சுத்தி சுத்தி
டெக்ஸ்டாப்பில் பறப்பான் இந்த மனிதன்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்

THE TOOL BOX:- சுத்தியல் கொண்டு டெக்ஸ்டாப்
பை உடைக்கலாம்.கீ:ழே படத்தை பாருங்கள்


PABLO THE PAINTER:- இதில் ஏணியை போட்டு
ஆள் பெயிண்ட் அடிப்பான். நாம் விரும்பினால்
நமது பெயரையும் பெயிண்ட் அடிக்க சொல்ல
லாம். கீழே உள்ள படத்தை பாருஙகள்.


DESKTOP SPLAT:- மேலிருந்து வரும் டிவி.
கல், வண்டு. மீன் ஆகியவற்றை கீழே விழாமல்
இந்த ஸ்பிரிங் மூலம் தடுக்க வேண்டும்.

கல்கள் விழுகின்றது.
THE ARSENAL :- 3 விதமான துப்பாக்கிகள்
உள்ளது. ஒன்று குண்டுமழை பொழியும். ஓன்று
தூள் தூளாக்ககும். ஒன்று நெருப்புமழை பொழியும்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
ERASER ED:- நமது கம்யூட்டரை சுத்தமாக அழித்து தந்து
விடும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.JUST FOR JOLLY PHOTOS;-
டேய்...டேய்..இறங்குடா...கிளை முறிகிறது...
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:
இதை பதிவிறக்க இங்குகிளிக் செய்யவும்.
டெக்ஸ்டாப்பில் விளையாடியவர்கள் இதுவரையில்:-

(படித்ததில் சுவைத்தது) சாப்ட்வேர்களின் கீ -யை கண்டுபிடிக்க


நமது கம்யுட்டரில் ஓ,எஸ். முதற் கொண்டு அனைத்து சாப்ட்வேர்களுக்கும் சி.டி.வைத்திருப்போம்.அதன் கீ -யை நாம் சி.டி.யின் மேலேயோ அல்லது சி.டியின் கவரிலோ எழுதி வைத்திருப்போம்.சி.டி.யின் கவர் தொலைந்துவிட்டாலோ சிடியின் மேல் உள்ள எழுத்து அலைந்துவிட்டாலோ நமக்கு சிரமம் தான். அதைப்போல் சாப்ட்வேர் சிடி நம்மிடம் இருக்கும். ஆனால் அதன் கீ நம்மிடம் இருக்காது. அதற்கான் கீ யை கண்டுபிடிப்பது எவ்வாறு? இந்த இக்கட்டான சூழ் நிலையில் நமக்கு உதவ வருகின்றது. இந்த சாப்ட்வேர். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்க
http://www.4shared.com/get/DOrfhp5S/productkeyexplorer_setup.html(subas archives)
செய்யவும்.
இதை கணிணியில் நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Find Keys  கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் நம்மிடம் உள்ள சாப்ட்வேர்களின் கீ கள் அனைத்தும் தெரியும். அதை தனியாக வேறு டிரைவிலோ அல்லது தனியே பிரிண்ட் எடுத்தோ நாம் சேமித்துக்கொள்ளலாம் .கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
 அதைப்போல் நமது இணைய இணைப்பின் முகவரியையும் நாம் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.

(படித்ததில் சுவைத்தது) கம்யூட்டரில் கரப்பான்பூச்சியை வரவழைக்க
நமது கம்யூட்டரில் ஏற்கனவே டெக்ஸ்டாப்பில் விளையாட,
தீ பிடிக்க தீ பிடிக்க,.கம்யூட்டரில்தண்ணீர் வரவழைக்க என
 முந்தைய பதிவுகளில்பார்த்தோம். பதிவினை பார்க்காதவர்கள்
 அந்த அந்ததலைப்புகளில் கிளிக் செய்தால் அந்த தளங்களுக்கு
செல்லலாம்.
கரப்பான்பூச்சிக்கு பயப்படாதவர்கள் இருப்பார்களா...
இன்றைய பதிவில் கம்யூட்டரில் கரப்பான்பூச்சியை
வரவழைப்பதை காணலாம். இந்த கரப்பான்பூச்சியை
வரவழைக்க இங்கு 
http://www.4shared.com/get/T3bgNUuN/C1_online.html(subas archives)
செய்யுங்கள். இது 2 எம்.பி.க்குள்
தான் உள்ள சின்ன சாப்ட்வேர்.
 இதை கிளிக் செய்து டவுண்லோடு செய்து கிளிக் செய்தபின்
உங்கள் கம்ப்யூட்டரில் கரப்பான் பூச்சி குறுக்கும்
நெடுக்கும் ஒடுவதை காணுங்கள்.
எனது மகனுக்கு சின்ன வயதில் இந்த சாப்ட்வேரை போட்டு
நீ கம்யூட்டரில் ஏதாவது செய்தால் இந்த மாதிரி கரப்பான்பூச்சி
வரும்டா என சொன்னேன். குடுகுடு என ஓடியவன் ஒரு
கட்டையை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். கொஞ்சம்
நான் கவனிக்காமல் விட்டிருந்தால் அவ்வளவுதான். மானிட்டர்
காலியாகி இருக்கும்.இதை ஏன் இங்கு சொல்கின்றேன் என்றால்
உங்கள் மகனோ -மகளோ இதுபோல் நீங்கள் இல்லாதபோது
கட்டையை எடுத்துவந்து மானிட்டரில் உள்ள கரப்பான் பூச்சியை அடிக்கபோகின்றார்கள்.
பதிவினை பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
JUST FOR JOLLY PHOTOS:-

இதுவரை வந்துள்ள PSD புகைப்படங்களில் இருந்து
சில படங்களை எடுத்து புதிய PSD படம் உருவாக்கி
உள்ளேன். ஏற்கனவே நான் வெளியிட்ட புகைப்படங்களும்
அதில் உருவாக்கிய படமும் கீழே:-
மேலே உள்ள படத்தில் மரத்தை எடுத்துள்ளேன்.


இந்த படத்தில் மண்டபம் -படிக்கட்டு - தூண் என எடுத்துள்ளேன்.

இந்த படத்தில் புலியை எடுத்துள்ளேன்.
இந்த படத்தில் வினாயகர் மற்றும் படிக்கெட்டு எடுத்துள்ளேன்.
இவையனைத்தையும் கலந்த கலவையில உருவான படம் மேலே


இந்த படத்தை பதிவிறக்க நீங்கள் இங்குகிளிக் செய்யுங்கள்.

(படித்ததில் சுவைத்தது) டெக்ஸ்டாப்பில் எறும்புகளை வரவழைக்க


டெக்ஸ்டாப்பில் ஏற்கனவே கரப்பான்பூச்சி.ஈ,தண்ணீர் என வரவழைத்தோம் அந்த வரிசையில் இன்று எறும்புகளை வரவழைக்கலாம்.12 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம்செய்ய
http://www.4shared.com/get/IO1xJowG/12-Ants.html (உங்களுக்காக வழங்குவது SUBAS ARCHIVES)
மேலே குறிப்பிட்டதை கிளிக் செய்யவும்.

 இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். அதில் முதலில் உள்ள ஸ்லைடரில் எத்தனை எறும்புகள் என்பதை தேர்வு செய்யுங்கள். அடுத்துள்ள ஸ்லைடரில் அதன் வேகத்தையும் கடைசியாக உள்ள ஸ்லைடரில் அது தெரியும் சதவீதத்தையும் தேர்வு செய்யுங்கள்.
கீழே உள்ள விண்டோவில் உங்கள் கர்சருக்கு ஏற்ப ஏதாவது ஒன்றினை தேர்வு செய்யுங்கள்.
ஒ.கே. கொடுங்கள். இப்போது எறும்புகள் நீங்கள் தேர்வு செய்ததற்கு ஏற்ப டெக்ஸ்டாப்பில் வலம் வர ஆரம்பிக்கும்.கீழே உள்ள படத்தில் பாருங்கள் எறும்புகள் மொய்கின்றன.
பயன்படுத்திப்பாருங்கள்.கருததுக்களை கூறுங்கள். 

(படித்ததில் சுவைத்தது) போட்டோஷாப் ஸ்டைல் எழுத்துக்கள் -பாகம் 1


புகைப்படம் எவ்வளவு முக்கியமோ அதைப்போல் அதில் எழுதும் எழுத்துக்களும் முக்கியம். அந்த எழுத்துக்களை நாம் விதவிதமான ஸ்டைலில் கொண்டுவரலாம்.இங்கு உங்களுக்கு 25 ஸ்டைல் எழுத்துக்களை இணைத்துள்ளேன். 1 எம்.பி. கொள்ளளவு கொண்ட அதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இந்த ஸ்டைல் எழுத்துக்களை டவுண்லோடு செய்து பின்னர் உங்கள் போட்டோஷாப்பில் இணைத்துக்கொள்ளவும. இப்போது வேண்டிய புகைப்படத்தை திறந்துகொள்ளவும்.வேண்டிய வார்த்தைகளை தட்டச்சுசெய்துகொண்டு இந்த ஸ்டைலை கிளிக் செய்யவும. உங்களுக்கு விதவிதமான ஸ்டைலில் எழுத்துக்கள் காட்சியளிக்கும். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.ஒரே வார்த்தையை விதவிதமான ஸ்டைலில் கீழே கொடுத்துள்ளேன்.
இதில்இணைத்துள்ள விதவிதமான எழுத்துக்களின் ஸ்டைலினை கீழே காணவும்.

இதனை போட்டோஷாப்பில் எவ்வாறு இணைப்பது என்பதனை 
அடுத்தபதிவில் பதிவிடுகின்றேன்.பயன்படுத்திப்பாருங்கள்.

(படித்ததில் சுவைத்தது) போட்டோ மார்ப்சினிமாவில் - விளம்பரங்களில் நாம்

போட்டோக்கள் மாறுவதை பார்த்திருப்போம்.

உதாரணத்திற்கு படையப்பா படத்தில்

ரஜினி பாடும் சிங்க நடை போட்டு 

சிகரத்தில் ஏறு என்கின்ற பாடலில்

ரஜினி முகம் குழந்தை முகமாகவும் -

புலி முகமாகவும் மாறுவதை பார்த்திருப்

பீர்கள் . அது போல் நாமும் நமது போட்டோ

வில் எப்படி செய்வது என பார்க்கலாம்.

முதலில் ஒரே அளவிளான இரண்டு புகைப்

படத்தை எடுத்து உங்கள் கணிணியின்

ஏதாவது போல்டரில் சேமித்து வைத்துக்

கொள்ளுங்கள்.

இந்த சாப்ட்வேரை முதலில் பதிவிறக்கம்

செய்து உங்கள் கணிணியில் நிறுவிக்

கொள்ளுங்கள்.

இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய


(குறைந்த அளவு இடம்தான்

இந்த சாப்ட்வேர் பிடிக்கும்). பின்னர்

நீங்கள் இதை திறக்கையில் அதில் உள்ள

மாதிரி படம் உங்களுக்கு கிடைக்கும்.இதன் கீழ்புறம் பார்த்தால் உங்களுக்கு 

Play பட்டன் இருக்கும். அதை Play 

செய்யுங்கள். உங்களுக்கு ஒரு ஐடியா

கிடைக்கும். இனி இதுபோல் நமது

புகைப்படத்தை எப்படி கொண்டு வருவது

என பார்க்கலாம்.


இதன் வலப்புறம்பார்ததால் உங்களுக்கு இந்த

காலம் தெரியும். அதில் உள்ள New Project

கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு மூன்று வித

மான Sequence கள் கிடைக்கும்.முதலில் உள்ள Morph Sequence ஆனது 

உங்கள் படத்திலிருந்து மற்ற ஒரு 

படத்திற்கு மாற பயன்படுவது. அல்லது மற்ற

ஒரு படத்திலிருந்து உங்கள் படம் மாற பயன்

படுவது.

அடுத்து உள்ள Warp Sequence ஆனது 

உங்கள் படத்திலேயே நீங்கள் சிரிக்க

கண்ணடிக்க பயன் படுவது.

அடுத்து உள்ள Zoom Pan Sequence ஆனது

உங்கள் படத்தை Zoom செய்ய பயன் படுகிறது. 

இப்போது நான் New Project கிளிக் செய்து

அதில் Zoom Pan Sequence தேர்வு செய்துள்ளேன்.

உங்களுக்கு கீழ்கண்ட வாறு படம் வரும்.


இப்போது மேல்புறம் பார்த்தீர்களே யானல்

உங்களுக்கு இந்த மாதிரியான காலம்

தென்படும்.அதில் Projects,Immages,Controls,

Play என நான்கு காலங்கள் தென்படும்.இதில் உள்ள Immages கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு இந்த மாதிரி சாரளம் வரும்.இப்போது மீண்டும் வலப்புறம் பார்த்தால்

உங்களுக்கு கீழ்கண்ட காலம் தெரியும்.

அதில் உள்ள Import Image - ஐ நீங்கள்

கிளிக் செய்து நீங்கள் ஏற்கனவே கணிணியில்

சேமித்துவைத்துள்ள படத்தை தேர்வு செய்யவும்.

இப்போது நீங்கள்தேர்வு செய்த படமானது

இரண்டு பக்கத்திலும் வருவதைக்காணலாம்.


இப்போது இந்தப்படங்களை பாருங்கள். அதை

சுற்றி சிவப்பு நிறக்கட்டம் உள்ளதை காண்பீர்கள்.

இது தான் நமது படத்தை எடிட் செய்ய பயன்

படுவது. இதில் முதல் படத்தில் உள்ள 

சிவப்பு கட்டத்தை விட்டுவிடுங்கள். அடுத்துள்ள

படத்தின் சிகப்பு நிற கோட்டில் நடுவில் உள்ள

நீல நிறத்தின் மீது கர்சர் வைத்து தள்ளி 

வாருங்கள். இப்போது உங்களுக்கு சிவப்பு

கட்டம் சுருங்கி வருவதை பார்ப்பீர்கள். 


இப்போது நான் முகத்தை மட்டும் க்ளோசப்பில்

கொண்டு வந்துள்ளேன்.இனி மேல்புறம் உள்ள

Immages அடுத்துள்ள Control -ஐ கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு கீழ்கண்டவாறு படம் கிடைக்கும்.


இப்போது நீங்கள் வலப்புறம் பார்த்தால் உங்களுக்க

கீழ்கண்ட வாறு காலம் கிடைக்கும்.


அதில் Start Delay,Middle Delay,End Delay,Play Time

மற்றும் Play Speed கிடைக்கும். இதில் ஓவ்வொரு

ஆப்ஷன் கீழ் உள்ள சிலைடரை நகர்த்தி 

படத்தின் வேகத்தை நீங்களாகவே நிர்ணயித்துக்

கொள்ளலாம். இதன் கீழ் உள்ள பிளே பட்டனை

அழுத்தி நீங்கள் உங்கள் படத்தின் ப்ரிவியூ

பார்த்துக்கொள்ளலாம்.

இப்போது மீண்டும் மேல்புறம் உள்ள 

Project கிளிக் செய்யவும்.உங்களுக்கு 

பழைய விண்டோ கிடைக்கும். இதில்

உள்ள Add Sequence கிளிக் செய்யவும்.

உங்களுக்கு Sequence பட்டியல் கிடைக்கும்.

அதில் முதலில் உள்ள Morph Sequence

கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட

விண்டோ ஒன்று ஓப்பன் ஆகும்.


மீண்டும் Immage கிளிக் செய்யவும். உங்களுக்கு இந்த 

மாதிரியான விண்டோ ஓப்பன் ஆகும். இப்போது வலப்புறம் உள்ள End Immage -ஐ 

கிளிக் செய்யவும். நீங்கள் தேர்வு செய்துள்ள

படத்தை கிளிக் செய்யவும்.உங்களுக்கு மேற்கண்டவாறு படம் கிடைக்கும்.

இதில் முதல் இரண்டு படங்கள் கிளியராகவும்

கீழ் உள்ள படம் குழம்பியுள்ளதையும் பார்க்கலாம்.

அடுத்து இப்போது Control -ஐ கிளிக் செய்யவும்.

இப்போது மீண்டும் உங்களுக்கு மேற்கண்ட

விண்டோ ஓப்பன் ஆகும். இப்போது உங்கள்

மவுஸை முதல் படத்தின் அருகே கொண்டு

சென்றால் உங்கள் மவுஸானது பென்சில்

போல் மாறும். இப்போது நீங்கள் முதல் படத்தில்

முகம் முழுவதையும், அடுத்து புருவங்கள்,

மூக்கின் நுனி, வாய், நெற்றிப்போட்டு என

புள்ளிகள் வையுங்கள். இப்போது இரண்டாவது

படத்தை பார்த்தீர்களே யானல் உங்களுக்கு

அதுபோல் புள்ளிகளும் காணப்படும். 

இப்போது இரண்டாவது படத்தின் அருகே

கர்சரை கொண்டு செல்லுங்கள். ஏதாவது

ஒரு புள்ளியை தேர்ந்தேடுங்கள். இப்போது

உங்கள் கர்சரானது ஒரு கையாக மாறும்.

முதல் படத்தை பாருங்கள். நீங்கள் தேர்வு

செய்த புள்ளி மட்டும் பிரகாசிப்பதை பார்ப்பீர்கள்.

இப்போது இரண்டாவது படத்தில் உள்ள 

புள்ளியை முதல் படத்தில் உள்ள உருவத்திற்கு

எற்ற இடத்தில் நகர்த்துங்கள்.(உதாரண்த்திற்கு

நீங்கள் முதல் படத்தில் நெற்றிப்பொட்டை

தேர்ந்தெடுத்தால் அடுத்த படத்தில் உள்ள

புள்ளியை நெற்றிப்பொட்டுக்கு நகர்த்துங்கள்.

முதல் படத்தில் மூக்கின் நுனியில் புள்ளி

வைத்தால் இரண்டாவது படத்திலும் உள்ள

புள்ளியையும் மூக்கின் நுனிக்கு நகர்த்தவும்)


இதில் உள்ள பிளே பட்டனை அழுத்தி ப்ரிவியூ 

பார்த்துக்கொள்ளுங்கள். இதில் உள்ள 

வேகங்களை முன்பு சொன்னவாறு நீங்கள்

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வாறு 

நிர்ணயித்துக்கொள்ளுங்கள்.

இப்போது மீண்டும் Projects தேர்வு

செய்யுங்கள். மீண்டும் Add Sequence

தேர்வு செய்யுங்கள். வரும் காலத்தில்

இப்போது Wrap Sequence தேர்வு செய்யுங்

கள். இப்போது உங்களுக்கு இந்த மாதிரி

படம் கிடைக்கும். இதிலும் மீண்டும்

Controls கிளிக் செய்து புள்ளிகள் வைக்கவும்.


இதில் கண்களுக்கு மேல்புறம் நெருக்கமான

புள்ளிகளும் கண்ணின் கீழ்புறம் இடைவெளி

விட்டும் புள்ளிகள் வைக்கவும். இனி இடப்புறம்

உள்ள படத்திற்கு வரவும். இதில் கண்ணில்உள்ள

ஒன்று விட்ட புள்ளிகளை கீழ்புறம் உள்ள 

புள்ளிகளின் இடை இடையே நகர்த்தவும்.

அதுபோல் வாயின் ஓரம் புள்ளிகள் வைத்து

அடுத்த படத்தில் அந்த புள்ளிகளை மேல்புறம்

நகர்த்துங்கள். இது பழக பழக தான் ந்னறாக

வரும். இப்போது பார்ததீர்களேயானல்

உங்கள் படம் கண் சிமிட்டி லேசாக புன்னகை

செய்வதை காணலாம்.வேக கட்டுப்பாடடை

நிங்கள் நிர்ணயித்துக்கொள்ளுங்கள். 

கடைசியாக மேல்புறம் உள்ள Play பட்டனை

அழுத்துங்கள். உங்களுக்கு இதுவரை செய்த

படங்கள் Preview வாக தெரியும்.

நீங்கள் மீண்டும் Project கிளிக் செய்ய 

உங்களுக்கு கீழ்கண்ட படம் ஓப்பன் ஆகும்.

இதுவரை நீங்கள் செய்த படங்களின்

தொகுப்பை கீழே காணலாம்.

இதில் நீங்கள் எந்த பாகத்தின் பட பிரிவியூ

வேண்டுமோ அதை கிளிக் செய்து 

பிளே செய்து பார்க்கலாம்.

 இதன் வலப்புறம் பார்த்தால் உங்களுக்கு

 இதைசேமிக்கும் வசதி இருக்கும்.


இதில் உள்ள Return கிளிக் செய்தால் நீங்கள்

உருவாக்கிய படம் மீண்டும் மீண்டும் வரும்.

அடுத்து Set Size . இதை கிளிக் செய்து 

படத்தின் நீள அகலத்தை நீங்கள் தேர்வு 

செய்து கொள்ளலாம். அதே போல் 

நீங்கள் விரும்பிய வார்த்தைகளையும்

பின்புற படங்களையும் மாற்றிக்கொள்ளலாம்.

இதில் உள்ள Print Frame - Save Frame 

உபயோகம் நமக்கு Adope Photo Premiere 

Software -ல் உபயோகப்படும். அதை 

பின்னர் பார்க்கலாம். இறுதியாக Save

Animation. இதை கிளிக் செய்தால் உங்களுக்கு

ஏழு வகையான பார்மெட்டுக்கள் கிடைக்கும்.

நாம் இதில் உள்ள AVI Formet தேர்வுசெய்து

ஓகே கொடுத்துள்ளேன். இந்த படம் கணிணியில்

ஏதாவது ஒரு டிரைவில் சேமிக்கவும்.

சில் நிமிடங்கள் காத்திருக்கவும். இப்போது

உங்கள் படம் ரெடி.

நான் தயாரித்த படத்தை நீங்கள் மேற்புறம்

உள்ள வீடியோ பார்மட்டில் பார்க்கலாம்.

இது வரை எனது புகைப்படத்தை பதிவில்

போட்டதில்லை. இந்த 100 வது பதிவில்

எனது மகன் உருவில் இருந்து மாறும்

புகைப்படம் அடியேன் தான்.

(பார்க்க சுமாராக இருக்கின்றேனா?)

பின் குறிப்பு:- இதில் உள்ள ஒவ்வொரு

Sequence -ஐ யும் தனி தனியேவும்

நீங்கள் பயன்படுத்தி வீடியோவாகவும்

சேமிக்கலாம்.
Share |

Get Live Score