தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

விதவிதமாய்-வித்தியாசமாய் ரிங்டோன்கள்சிலர் செல்போனில் விதவிதமாக ரிங்டோன்கள் - மெசேஜ்
டோன்கள் வைத்திருப்பார்கள். அவர்களுக்காகவே இநத
தளம் உள்ளது. இதில் 3,18,538 -க்கும் மேற்பட்ட ரிங்
டோன்கள் வெவ்வேறு கேட்டகிரியில்(Categories) உள்ளது.
புகழ்பெற்ற பாடல்கள்,செந்தில் கவுண்டமணி காமெடிகள்,
வடிவேலு காமெடிகள்,குழந்தைகளின் சிரிப்புகள்,குழந்தையின்
அழுகுரல்கள்,நகைச்சுவையான இசைதொகுப்புகள் என
நமக்குவேண்டிய கேட்டகிரியை(Categories) தேர்வுசெய்து
வேண்டியதை -விரும்பியதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த தளம் செல்ல முதலில் இங்கு கிளிக் செய்யவும்.

உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் உள்ள பிளே பட்டனை கிளிக் செய்து பாடலை முதலில்
முன்னோட்டம கேளுங்கள். உங்களுக்கு பாடல்- காமெடி வசனம்
-ரிங் டோன் -பிடித்திருந்தால் இதன் கீழ் உள்ள Get Ringtone கிளிக்
செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள PC DOWNLOAD கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓன்று ஓப்பன் ஆகும்.


இதன் கீழ் புறத்தில் உள்ள Start Download கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு நீங்கள் ரிங்டோனை எந்த டிரைவில் சேமிக்க
போகின்றிர்களோ அந்த டிரைவை தேர்ந்தேடுங்கள். பிறகு
சேமியுங்கள்.
இப்போது உங்கள் விருப்பபாடல் உங்கள் கணிணியில்
இருக்கும். அதிலிருந்து நீங்கள் உங்கள் மொபைலுக்கு
டேட்டா கேபிள் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.
பதிவை பாருங்கள்.பிடித்திருந்தால் மறக்காமல்
ஓட்டுப்போடுங்கள்.

விதவிதமான போட்டோப்ரேம்கள்.இணைய நண்பர் போட்டோ ஸடுடியோ ஆரம்பித்து உள்ளார். அவருக்கு விதவிதமான ப்ரேம்கள் தேவை என்று சொன்னார். அவருக்காகவும் உங்களுக்காகவும் நான் 25 வகையான ப்ரேம்களை இங்கே பதிவிட்டுள்ளேன். 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய   இங்கு கிளிக் செய்யவும்.

இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவது மூலம் நீங்கள் விதவிதமான ப்ரேம்களை காணலாம். தேவையானதை தேர்வு செய்யுங்கள். அடுத்து உங்கள் கணிணியில் இருந்து தேவையான புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.
மற்றும் ஒரு டிசைன் படம் கீழே-
இதிலேயே நாம் ஸ்லைட் ஷோவும் கொண்டுவரலாம்.தனியே படத்தை சேமிக்கும் வசதி இல்லாததால் இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சேமிக்கலாம்.

(படித்ததில் சுவைத்தது )டெக்ஸ்டாப்பில் 22 தோற்றங்கள்டெக்ஸ்டாப்பில் தண்ணீர்வரவழைப்பது,கரப்பான் பூச்சியை ஓடவிடுவது,தீ பிடிக்க வைப்பது, டெக்ஸ்டாப்பில் விளையாட்டு என பல பதிவுகளை இதறகு முன் பார்த்தோம். இனறைய பதிவில் டெக்ஸ்டாப்பில் விதவிதமாக 22  தோற்றங்கள்(Effect) எப்படி கொண்டுவருவது என பார்க்கலாம். இது மிகவும் சின்ன சாப்ட்வேர்..32 கே.பி.தான். நீங்கள் டெக்ஸ்டாப்பில் இந்த வசதிகளை பெற இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு சின்ன ஐ-கான் வரும். அதை கிளிக்செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஓவ்வோரு Effect(எபக்ட்) டையும் நீங்கள் கிளிக் செய்து கீழே உள்ள Play(பிளேவை) அழுத்தினால் உங்கள் டெக்ஸ்டாப் விதவிதமாக மாறுவதை காணலாம்.சில மாறுதல்கள் கீழே:-
மற்றும் ஓரு மாறுதல்:-
அடுத்தது:-
அதற்கடுத்தது:-
மற்றும் ஒரு எபக்ட்:-
உபயோகித்துப்பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.

(படித்ததில் சுவைத்தது) பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற


கிராமப்புறங்களில் கிணறு தூர் வாருவதை பார்த்திருப்பீர்கள். எப்போதோ கிணற்றில் போட்ட பொருள்கள் ஒவ்வொன்றாக கிடைக்கும்.அதைப்போலவே இந்த சாப்ட்வேரில் நாம் நமது மெமரி கார்ட்,பென்டிரைவ்,ஹாரட்டிரைவ் என அதில் உள்ள அனைத்து தகவல்களையும் -பார்மெட் செய்தபி்ன் சுலபமாக பெறலாம்.இந்த சாப்ட்வேர்ரானது இமெஜ் பைல்,டேடா பைல்,வீடியோ பைல்,மற்றும் ஆடியோ பைல்களை மீட்டுகொடுக்கும்.இந்த சாபட்வேரிலிருந்தும் தகவல்களை பெற முடியாமல் போனால் அவ்வளவுதான்.(சில பென்டிரைவ் மற்றும் மெமரி கார்ட் சர்வீஸ்க்கு கொடுக்கும் முன் இந்த சாப்ட் வேர் மூலம் பரிசோதனை செய்துவிட்டு கொடுப்பது நமக்கு நல்லது) சரி 4 M.P. கொள்ளளவு உள்ள இந்த சாப்ட் வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Select a Drive கிளிக்செய்யுங்கள் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான டிரைவை தேர்வு செய்து ஒன்றாம் எண்ணை ஒ.கே. கொடுங்கள்.கீழே உள்ள விண்டோ தோன்றும்.
உங்களை Confirm செய்ய சொல்லி மெசெஜ் வரும் . யெஸ் கொடுங்கள்.
அவ்வளவுதான் .உங்கள் டிரைவிலிருந்து தகவல்கள் பெற ஆரம்பிக்கும்.
ஸ்கேன் பண்ணி முடிந்ததும் டீப் ஸ்கேன் செய்யவா என கேட்கும் அதற்கும் யெஸ் என பதில் அளியுங்கள்.
அதிலுள்ள ப்ரிவியுவினை பாருங்கள்.நீங்கள் எப்போதோ பார்மெட் செய்த பைல்கள் தெரியும்.
ஸ்கேன் பண்ணி முடித்ததும் வந்துள்ள படங்களை பாருங்கள்.(வெய்யிலுக்கு இதமாக ஐஸ்கிரீம் படங்களை பதிவிட்டுள்ளேன்)
இதில் உள்ள அட்வான்ஸ் ஆப்ஷனை பயன் படுத்தி உங்களுக்கு மீட்டுஎடுத்த தகவல்கள் எங்கு சேமிக்க வேண்டுமோ அங்கு சேமிக்கலாம். அதைப்போல மீட்டு எடுத்த தகவல்களை சிடியாக வேண்டுமானாலும் இந்த சாப்ட்வேர்மூலமே காப்பி செய்து கொள்ளலாம்.பயன்படுத்திப் பாருங்கள்.
ஓட்டு பட்டையில் ஓட்டு போட்டு செல்லுங்கள்.

(படித்ததில் சுவைத்தது) டிரையல்விஷன் சாப்ட்வேர்களின் காலகெடு தேதியை நீடிக்க.

சாப்ட்வேர் சோதனை பதிப்பாக வாங்குவோம். சில நாட்களில் அதற்கான நேரம் முடிந்ததும் ஒப்பன் ஆகாது.நாட்களை நீடிக்க(நேரத்தை நீட்டிக்க) - என்றும் மார்க்கென்டேயனாக சாப்ட்வேர் நமக்கு ஒத்துழைக்க இந்த சாப்ட்வேரை நாம் நமது கணிணியில் இன்ஸ்டால் செய்யவேண்டும்.1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் கணிணியில் உள்ள டிரையல் விஸன் சாப்ட்வேரின் .Exe பைலை  நீங்கள் தேர்வு செய்யுங்கள்.புதிய தேதியினை தேர்வு செய்யுங்கள். பக்கத்திலேயே உங்களுக்கு காலண்டர் கொடுக்கப்பட்டிருக்கின்றது பாருங்கள்.
தேவையான தேதியை தேர்வு செய்யுங்கள்.Enter a name for create desktop icon என்கின்ற விண்டோவில் ஒரு புதிய பெயரை சாப்ட்வேருக்கு நிறுவுங்கள்(வையுங்கள்). அடுத்து்ள்ள Create Desktop Short-cut  கிளிக் செய்யுங்கள் இப்போது உங்கள் டெக்ஸ்டாப்பில் சாப்ட்வேர் அமரந்துகொள்ளும். இப்போழுது நீங்கள் நீடிப்பு செய்த சாப்ட்வேரின் பழைய Desktop short cut.Startup முதலியவற்றை நீக்கி விடுங்கள். இப்போது நீங்கள் தேர்வு செய்த ஐ-கானை கிளிக்செய்யுங்கள்.
உங்களுக்கு சாப்ட்வேர் தடையில்லாமல் வேலை செய்யும்.

நேரம் சொல்லும் கடிகாரம்.

பேசும் நோட்பேட் பார்த்தோம். இன்று நேரம் சொல்லும் கடிகார சாப்ட்வேர் பற்றி பார்க்கலாம்.5 எம்.பி. கொள்ளளவு உள்ள சிறிய சாப்ட்வேர் மிக சிறப்பான சேவைகள் செய்கின்றது.இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களது டாக்ஸ்பாரில் இது வந்து அமர்ந்துகொள்ளும்.இதை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Say the time கிளிக் செய்ததும் அப்போதைய நேரம் உங்களுக்கு சொல்லும் அதன் கீழ் உள்ள Settings கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் விருப்பமான வகை யின் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்துகொள்ளவும்.
இதில் உள்ள new reminder நமக்கு தேவையான தகவலை தேவையான நேரத்திற்கு ஒலிபரப்ப செய்யலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
வீட்டுக்காரம்மா சினிமாவுக்கு அழைத்து செல்ல சொல்லியிருப்பார்கள். வேலை மும்முறத்தில் நாம் மறந்து பின்னர் வீட்டில் சென்று டோஸ்வாங்குவோம்.அந்த சிரமம் குறைக்க இதில நாம் செட் செய்து கொள்ளலாம்.நான் சினிமாவுக்கு செல்வதை இதில் ரிமைண்டராக செட் செய்துள்ளேன். அந்த நேரம் வந்ததும் உங்களுக்கு அலாரம் அடித்து உங்களுக்கு நினைவுட்டும்..கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் வேண்டிய இசையை நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.நமக்கு கீழ் வேலை செய்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட பைலை நமக்கு கொண்டுவந்து தருகிறார்களோ இல்லையோ இந்த சாப்ட்வேர் நமக்கு குறிப்பிட்ட நேரத்தில் கொண்டுவந்து சேர்த்துவிடும்.அதைப்போலவே URL லிங்க் கும் நாம் கொடுக்கலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
உலகின் வெப்ப நிலையை யும் நாம் அறிந்து கொள்ளலாம்.
இதைப்போலவே நமக்கு நோட் வசதியும உள்ளது. தேவையான தகவலை நோட்டில் குறித்துவைத்தால் குறிப்பிட்ட நேரத்தில் நமக்கு நோட் ஓப்பன் ஆகும்.அதைப்போலவே இதில் காலண்டரையும் கொண்டுவரலாம். வருடம் ஆரம்பித்து எவ்வளவு நாள் - வருடம் முடிய எவ்வளவு நாள் (புது வருடம் பிறக்க எவ்வளவு நாள்) என அறிந்துகொள்ளலாம்.நிலவின் அன்றைய தோற்றத்தையும்அறிந்துகொள்ளலாம்.
உலகின் அன்றைய பகல் -இரவு நேரப்பொழுதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.அதைப்போல உலக டைம் கன்வர்ட்டரும் இதில இணைக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில Stopwatch & Countdown Clock இதில் உள்ளது. குறிப்பிட்ட நேரம் செட் செய்து பைலை நேரடியாக திறக்குமாறு செய்யலாம். உடன் இனிய இசையையும் ஒலிக்குமாறு செய்யலாம்.
அனைத்து வசதிகளையும் பயன்படுத்திப்பாருங்கள். 

வீடியோ ஸ்கிரீன்சேவரை உருவாக்குவது எப்படி?


விதவிதமான வீடியோ -ஸ்கிரீன்சேவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் நாமே ஸ்கிரீன்சேவரை உருவாக்கினால் எப்படி இருக்கும். நமக்கு விருப்பமான படங்கள்- சுப்ரபாதம்-கந்தசஷ்டி கவசம் என நமது கம்யூட்டர் ஒய்வாக இருக்கும் சமயங்களில் வீடியோவாக ஒளித்தால் அருமையாக இருக்கும் அல்லவா? அதற்கு இந்த சின்ன சாப்ட்வேர நமக்கு உதவி புரிகின்றது.இந்த சாப்ட்வேரில பதிவிடும் வீடியோவை நாம் முதலி்ல் .swf பைலாக மாற்றிக்கொள்ளவேண்டும். அதற்கு உங்களிடம் Format Factory என்கின்ற சாப்ட்வேர் வேண்டும். இந்த சாப்ட்வேரினை பற்றி நான் ஏற்கனவே கம்யூட்டரின் அஞ்சரைப்பெட்டி என்கின்ற தலைப்பில் விரிவாக பதிவிட்டுள்ளேன். அதனை காண இங்கு கிளிக் செய்யவும்.இப்போழுத உங்களிடம் உள்ள வீடியோ பைலை இந்த சாப்ட்வேர் மூலம் .SWF பைலாக மாற்றிக்கொள்ளுங்கள். இப்போது WG SCREEN SAVER CREATER என்கின்ற சாப்ட்வேர் தேவை.5 எம்.பி்.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம செய்ய இங்கு கிளிக்செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Add Files மூலம் தேவையான வீடியோ பைலை தேர்வு செய்யுங்கள். வீடியோ ஸ்கிரீனை தேவையான அளவிற்கு செட் செய்யுங்கள்.உங்களது வீடியோ அளவானது ஸ்கிரீனைவிட குறைந்த அளவாக இருந்தால் வேண்டிய நிறத்தினை பின்புலத்தில் கொடுத்துக்கொள்ளலாம். இனி அதில் உள்ள Creator கிளிக் செய்யவு்ம். சில நிமிடங்களில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இந்த ஸ்கிரீன்சேவருக்கு உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுக்கலாம்.இப்போது டெக்ஸ்டாப்பிற்கு வந்து காலி இடத்தில் வைத்து ரைட் கிளிக் செய்யுங்கள்.டிஸ்பிளே ப்ராபர்டிஸ் தேர்வு செய்து அதில ஸ்கிரீன்சேவர் டேபினை கிளிக் செய்யுங்கள். வரும் விண்டோவில் நீங்கள் கொடுத்த பெயரினை தேர்வு செய்து அப்ளை-ஓ.கே.கொடுங்கள். அவ்வளவுதான .நீங்கள் விரும்பிய பாடல் ஸ்கிரீன்சேவராக ஓட ஆரமபிக்கும். இதனுடைய மூல பைலை நீங்கள் விரும்பிய நபருக்கு கொடுங்கலாம். சற்று குழம்புவது மாதிரி இருந்தாலும் பெர்றுமையாக செய்தீர்களேயானால் அருமையாக வரும். 
 படித்து விட்டு ஓட்டுப்பட்டையில் ஓட்டு போட மறந்திடாதிங்க....!
Share |

Get Live Score