தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

படித்ததில் சில உங்களுக்கு தினமும் ஜாதகப்பலன்கள்



கடந்தவாரம் குருபெயர்ச்சி - தொடர்நது ராகு -கேது பெயர்ச்சி என எல்லோரும் பெயர்ச்சிபலன்கள் பார்த்தனர் நாமும் ஏதாவது ஜோதிடசம்பந்தமாக போடலாம் என்று இந்த சின்ன சாப்ட்வேரை இங்கு பதிவிடுகின்றேன்.10 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள் இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வரும் விண்டோவில் தேவையானதை தேர்வு செய்யுங்கள்.
வரும் விண்டோவில் ஜாதக கட்டத்தினை வடஇந்திய ஸ்டைலிலோ - தென் இந்திய ஸ்டைலையோ முடிவு செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில உள்ள டேப்பில் எது தேவையோ அதனை கிளிக்செய்யுங்கள்.
அன்றைய பஞசாங்க விவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். இது குழந்தை பிறப்பு முதல் பூப்படைவது வரை பயன்தரும்.வேறு முக்கிய நிகழ்வினையும் குறிந்துகொள்ள அன்றைய பஞசாங்கம் பலன்தரும்.
பிறக்கும்போது எந்தஎந்த கிரகங்கள் எந்த எந்த இடங்களில் இருந்தது என்பதை அறிந்துகொள்ளலாம்.
முந்தைய தேதிபற்றி நமக்கு விவரங்கள் வேண்டுமானாலும் அதில் வலது மூலையில் உள்ள காலண்டரை தேர்வு செய்வது மூலம் அறிந்துகொள்ளலாம்.
அந்த தேதியில் உள்ள ஜாதககட்டத்தினையும் எளிதில கொண்டுவரலாம்.
சாதாரணமாக நாம் ராகுகாலம் என்றால் காலை 7-30 மணி முதல் 9 மணி வரை என குறிப்பிடுவோம். ஆனால் இந்த சாப்ட்வேரில் நிமிடங்கள் வித்தியாசமாக வருகின்றது. நீங்கள் ராகுகாலம் - எமகண்டம் பார்த்து நல்ல காரியம் செய்பவராக இருந்தால் இந்த சாப்ட்வேரை உபயோகிக்கலாம்.

கணனியின் வேகத்தை அதிகரிப்போமா

நமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில்
துவங்கும். சிலர் கணிணியை ஆன் செய்துவிட்டு டீ சாப்பிட்டுவர
சென்றுவிடுவர். அவர்கள் டீ சாப்பி்ட்டுவருவதற்கும் கணிணி ஆன்
ஆகி இருப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும். கணிணி அவ்வாறு
மெதுவாக இயங்க என்ன காரணம்.?
சில சாப்ட்வேர்களை நாம் இன்ஸ்டால் செய்யும் போது அந்த
மென்பொருள்களின் ஐகான்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள டாஸ்க்பாரின்
வலது பக்க மூலையில் அமர்ந்துவிடும். இவ்வாறு தேவையில்லாத
மென்பொருள்கள் நமது கம் யூட்டர் பூட் ஆகும் போது விண்டோஸ்
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தோடு லோடு ஆவதால் கணிணி பூட் ஆவதற்கு
அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனை எவ்வாறு தவிர்க்கலாம்
என இப்போது காணலாம்.
முதலில் டெஸ்க்டாப்பிலுள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக்
செய்து ரன் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். அதில் msconfig என
தட்டச்சு செய்து ஓ.கே. கொடுங்கள். விளக்கப்படம் கீழே:-

இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் ஆறாவது காலத்தில் உள்ள Startup கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இப்போது வரும் Startup விண்டோவில் உங்களுக்குஎந்த
மென்பொருள் விண்டோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் லோடு ஆக
வேண்டுமோ அதை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை Disenable
செய்து விடுங்கள். Apply செய்து ஓ.கே. கொடுங்கள்.

இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

ரீ -ஸ்டார்ட் கொடுங்கள். இப்போது உங்கள் கணிணி வேகமாக
செயல்படுவதை காண்பீர்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன்
முடிக்கின்றேன். இன்னும் தேவையில்லாதவற்றை எல்லாம்
எப்படி நீக்குவது பற்றி பின்னர்பார்க்கலாம்.

3D

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.

இன்றைய இணையத்தளம் அறிமுகம் பகுதிக்காக உங்களுக்கு அறிமுகம் செய்யப் போகும் இந்த இணையத்தளம் மருத்துவ பீட மாணவர்களுக்கும் வரும் காலங்களில் மருத்துவம் கற்க இருக்கும் மாணவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

ஒவ்வரு மனித உடலிலும் உள்ள அம்சங்களை அறிய வேண்டும் என்றால் நாம் ஆய்வுகூடம் ( Lap )அல்லது மருத்துவக் கண்காட்சிகளில்தான் ( Medical exhibition ) அறிய வேண்டும் ஆனால் இங்கு எல்லாம் செல்வதற்க்கு நேரம் இல்லை என்பவர்களுக்கு முப்பரிணாம ( 3D ) அடிப்படையில் சகல விளக்கங்களுடனும் மற்றும் உங்களுக்கு விரும்பிய முறையில் மனித உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் 360 பாகையில் சுற்றி பார்க்கும் வகையில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தின் பெயர்தான் Bio Digital Human : Explore the Body in 3D
Share |




Get Live Score