தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

குழந்தைகளை வரைய பழக்குவோமா..

விடுமுறை விட ஆரம்பித்துவிட்டார்கள். குட்டி குழந்தைகள் இனி வீட்டில் சும்மா இருக்கமாட்டார்கள்.விதவிதமாக சுவரில் படங்களை வரைந்துவைப்பார்கள்.அவர்கள் சுவரில் விதவிதமாக படங்களை வரையாமல் கணிணியில் வரைய இந்த சின்ன சாப்ட்வேர் உதவும்.20 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஓப்பன் புக் என்னும் டேபை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள படத்தை தேர்வு செய்து அருகில் உள்ள டிக் மார்க்கை கிளிக் செய்யுங்கள்.
புகைப்படம் ரெடி.இப்போது ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நிறத்தை நிரப்பவும். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
நீங்கள் வண்ணங்களை நிரப்ப உங்களுக்கு பக்கெட் டூல் .கிரையான் டூல்கள் உள்ளது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் Songs என்னும் டேபை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள 6 பாடல்களில் எதை கிளிக் செய்கின்றோமோ அதற்கேற்ப பாடல் நமது கர்சர் மூவ்க்கு ஏற்ப ஒலிக்க ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு பாடலுடன் படம் வரைவது மகிழ்ச்சியை அளிக்கும்.
இதில் ஸ்டாம்ப் டூலும் உள்ளது. விதவிதமான ஸ்டாம்ப் கொண்டுவருவதுடன் விதவிதமான அளவிலும் கொண்டுவரலாம்.
விலங்குகள் என எடுத்துக்கொண்டால் விதவிதமான விலங்குகள் உள்ளது.ஒவ்வொன்றையும் கலர்கொடுத்து மகிழலாம்..அதைப்போல ஏஞ்சல் என எடுத்துக்கொண்டால் விதவிதமான தேவதைகள் படங்கள் கிடைக்கும். அனைத்தையும் கலர்கொடுத்து மகிழலாம். சேமிக்கலாம்.பிரிண்ட் எடுத்துகொள்ளலாம்.அப்புறம் என்ன - குழந்தைகளுக்கு டவுண்லோடு செய்து விளையாட கொடுங்கள.நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.;

வீடியோ பாடல் டவுன்லோட் செய்ய


முதலில் நீங்கள் Real one Player என்கின்ற பிளேயரை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அதன் முகவரி தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.இப்போது பழைய தமிழ் வீடியோ பாடல்கள் தளம் செல்லவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் நீங்கள் பதிவிறக்க விரும்பும் பாடல்மீது கர்சரை வைத்து கிளிக் செய்யவும்.நான் அன்பே வா பாடலை கிளிக் செய்துள்ளேன்.இப்போது வீடியோ ஓட ஆரம்பிக்கும். அப்போது உங்களது வீடியோ மூலையில் Download This Video என்கின்ற பாப்அப் மெனு கிடைக்கும். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
அதை கிளிக் செய்ததும் உங்களுக்கு உங்களது பாடல் டவுண்லோடு ஆக ஆரம்பிக்கும்.
டவுண்லோடு முடிந்ததும் மை டாக்குமெண்ட்ஸ், மைவீடியோ வில் சென்று பார்த்தால உங்களுக்கான வீடியோ படம் அங்கு காத்திருக்கும்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
என்றும் அன்பின்
சுபாஷ்

கம்யூட்டர் தானே ஷெட்டவுண் ஆக. படித்ததில் சுவைத்ததுசில நேரங்களில் நாம் அவசரமாக வெளியில் செல்லவேண்டி வரலாம்.டவுண்லோடுக்கு சாப்ட்வேரோ - திரைப்படங்களோ - பாடல்களோ -டவுண்லோடு செய்துகொண்டிருப்போம். அது டவுண்லோடு ஆகும் வரை நம்மால் கம்யூட்டருடன் இருந்து அதை ஷெட்டவுண் செய்ய முடியாது.அந்த மாதிரியான சமயங்களில் நமக்கு கைகொடுக்க வருகின்றது இந்த குட்டி சாப்ட்வேர். 600 கே.பி. அளவுள்ள இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் 15 நிமிடத்திலிருந்து 6 மணி நேரம் வரை கம்யூட்டர் தானே ஷெட்டவுண் ஆகும் நேரத்தை இதில் உள்ள ஸ்லைடரை நகர்ததுவது மூலம் செட் செய்யலாம்.

 இப்போது இதில் உள்ள ஸ்டார்ட் கிளிக் செய்தால் உங்களுக்கு கவுண்டவுண் ஆரம்பிக்கும்.
நீங்கள் குறிப்பிட்ட நேரம் வந்ததும் கம்யூட்டர் தானே ஆப் ஆகிவிடும். சின்ன கல்லு -பெத்த லாபம்-என பஞச தந்திரம் படத்தில் ஒரு வசனம் வரும் .அதுபோல் சின்ன சாப்ட்வேர் -அதிக பலன் கொடுக்கின்றது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை தெரிவியுங்கள்
அன்புடன்
சுபாஷ்
Share |

Get Live Score