தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

கணிதப்பாடம் (படித்ததில் சுவைத்தது)

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கணக்கிணை சுலபமாக போட மற்றும் ஒரு சாப்ட்வேர் இது.2 எம்.பி.க்குள் உள்ள இலவச சாப்ட்வேரான இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Percent Correct கீழே உள்ள ஸ்லைடரை நகர்த்தி நேரத்தை நாம் சுலபமாக செட்செய்திடலாம். ஒவ்வோரு பெருக்கல் கணக்கிற்கும் நாம் விடை காணவேண்டும். இதைப்போலவே கூட்டல். கழித்தல். பெருக்கல். வகுத்தல் கண்க்குகள் உள்ளது. இடது புறம் உங்களுக்கு வரிசையாக பட்டன்கள் இருக்கு்ம்.தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
நான் வகுத்த ல் கணக்கினை தேர்வுசெய்துள்ளேன்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
 இதில் ஏழாவதாக உள்ள டேபை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகு்ம்.
இதில் வட்டத்தினுள் உள்ள தேவையான எண்ணை பயன்படுத்தி இறுதி வட்டத்தில் உள்ள எண்ணிக்கையை வரவழைக்க வேண்டும். இதைப்போலவே இறுதியில் உள்ள Square கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வலது புறம் எண்ணிக்கைகள் கீழே உள்ள எண் ணிக்கைகள் சரியாக வரவேண்டும். பார்க்க சுலபமாக தோன்றினாலு்ம் சற்று கடினமாகவே உள்ளது. வலமிருந்து இடம் வரு்ம் கூட்டுத்தொகை மேலிருந்து வரும் கூட்டுத்தொகை வித்தியாசம் வருகின்றது. சற்று முயற்சித்தால் சரியான விடைவருகின்றது.விளையாடி பாருங்கள்.
முயற்சி திருவினையாக்கும்.

டிரைவில் இடம் பிடிக்க படித்ததில் சுவைத்தது


முக்கியமான சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும்போதும் - நீரோவில் சி.டி.காப்பிசெய்யும்போதோ அல்லது ஏதாவது பைல்களை சேமிக்கும்போதோ டிரைவில் இடம் இல்லை என்கின்ற தகவல்வந்து நம்மை எரிச்சலுட்டும். தற்காலிகமாக நாம் இடம் ஏற்படுத்திக்கொடுத்து நிலைமையை சமாளிக்கலாம். அதை புதியவர்கள் எவ்வாறு செயல்படுத்துவது என்று இன்று பார்க்கலாம்.முதலில் ஒவ்வொரு டிரைவிலும் எவ்வளவு காலி இடம் இருக்கின்றது என்பதனை தனியே குறித்துக்கொள்ளுங்கள்.இப்போது My Computer மீது ரைட் கிளிக செய்து Properties கிளிக் செய்யுங்கள். கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் System Restore டேபை தேர்வு செய்யுங்கள்.
அதில் எந்த டிரைவின் அளவை அதிகரிக்க வேண்டுமோ அதனை தேர்வு செய்யுங்கள். நான் சி - டிரைவை தேர்வு செய்துள்ளேன்.இப்போது Setttings கிளிக் செய்யுங்கள்.
வரும் விண்டோவில் Disk space to use என்பதில் உள்ள ஸ்லைடரை Max -திலிருந்து Min - க்கு கொண்டுவாருங்கள். கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள். 
ஓ.கே. கொடுத்து பின்னர் மீண்டும் திறந்து இப்போது தேவையான அளவிற்கு ஸ்லைடரை நகர்த்துங்கள்.
மீண்டும் ஓ,கே. கொடுததுவிடுங்கள் இப்போது உங்கள் டிரைவில் காலி இடம் எவ்வளவு உள்ளது என்று பாருங்கள. முதலில் குறித்த அளவையும் இதையும் ஒப்பிட்டு பாருங்கள்.நிச்சயம் காலி இடத்தின் அளவு அதிகமாக மாறிஇருக்கும். நான் விண்டோஸ் எக்ஸ்பியில் இந்த முறையை பயன்படுத்தி டிரைவின் இடத்தை அதிகரிக்கின்றேன். நீங்களும முயன்று பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
Share |

Get Live Score