தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

அனானிமஸ் ஈமெயில் அனுப்புவது எப்படி?
மற்றவர்களுக்கு நம் ஐடி தெரியாமல் அனானிமஸ் ஈமெயில் அனுப்புவது எப்படி?

இணையத்தில் இலவச ஈமெயில் சேவை வழங்கும் நிறுவனம் பல உள்ளன. ஜிமெயில்,யாகூ,ஹாட்மெயில் போன்ற நிறுவனங்கள் பிரபலமானவைகள். இந்த தளங்களில் நாம் உறுப்பினர் ஆகி நமக்கென ஒரு முகவரியை உருவாக்கி கொண்டு அதன் மூலம் நம் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் மெயில் அனுப்புகிறோம். ஆனால் நம்முடைய ஈமெயில் முகவரியை மறைத்து மற்றவர்களுக்கு ஈமெயில் அனுப்புவது எப்படி என பார்ப்போம். இதன் மூலம் நண்பர்களுக்கு உங்களின் முகவரியை மறைத்து அனுப்பி கிண்டல் பண்ணலாம், மற்றும் ஒரு சில அலுவலகங்களில் முக்கிய மெயில் தளங்களை முடக்கி வைத்திருக்கலாம் அது போன்ற சமயங்களிலும் இந்த முறை உங்களுக்கு உதவி புரியும்.

Anonymous Mail அனுப்ப இந்த தளத்தில் செல்லுங்கள். உங்களுக்கு அந்த தளம் ஓபன் ஆகி கீழே இருப்பதை போல இருக்கும். அதில் To என்ற இடத்தில் அனுப்ப வேண்டிய முகவரியை கொடுக்கவும்.

Message என்ற பகுதியில் நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை கொடுத்து பிறகு கீழே உள்ள Send Anonymously என்ற பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் உங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்காமல் மற்றவர்களுக்கு மெயில் அனுப்பி விடலாம்.

இந்த முறையில் அனுப்பப்படும் ஈமெயில்கள் உடனே சென்று சேராது. அதிகபட்சம் 12 மணி நேரம் கூட ஆகலாம். 

Note: இதன் மூலம் அனுப்பப்படும் மெயில்களில் உங்கள் ஈமெயில் ஐடியை தெரியாமல் மறைத்தாலும் உங்கள் கணினியின் அனைத்து விவரங்களும் சேமிக்கப்படும். ஆகவே விபரீதமாக எந்த மெயிலும் அனுப்ப வேண்டாம். தண்டனையில் மாட்டி கொள்வீர்கள்.

Free Online Photoshop editor பக்கம் போவோமா
ஆன்லைனில் போட்டோஷாப் இலவசமாக உபயோகிக்க - Free Online Photoshop editor

போட்டோக்களை எடிட் செய்யும் மென்பொருட்களில் அடோப் நிறுவனம் வழங்கும் போட்டோஷாப் மென்பொருள் தான் எப்பவுமே நம்பர் 1. பல மென்பொருட்கள் இருந்தாலும் இந்த போட்டோஷாப் மென்பொருளுக்கு ஈடாக எதுவும் போட்டி போட முடியவில்லை. பல எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளதால் அனைவரும் இந்த மென்பொருளை உபயோகிக்கின்றனர். ஆனால் இந்த போட்டோஷாப் மென்பொருளை பணம் கொடுத்து வாங்கினால் தான் உபயோகிக்க முடியும். ஆனால் ஆன்லைனில் இந்த மென்பொருளை இலவசமாக உபயோகிக்க ஒரு அருமையான தளம் உள்ளது.

இந்த ஆன்லைன் எடிட்டரில் போட்டோஷாப் மென்பொருளில் உள்ள பல எண்ணற்ற வசதிகளும் உள்ளது. உபயோகிப்பதும் போட்டோஷாப் போன்றே உள்ளது. போட்டோக்களை facebook, picasa, flickr போன்ற தளங்களில் இருந்து நேரடியாக அப்லோட் செய்யும் வசதியும் உள்ளது. 

போட்டோஷாப் மென்பொருளை பணம் கொடுத்து வாங்க இயலாதவர்களுக்கு இந்த தளம் மிகப்பெரிய பரிசாகும். இனி போட்டோஷாப் மென்பொருள் இல்லையே என்ற கவலை இல்லாமல் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த மென்பொருளை உபயோகித்து கொள்ளலாம். 
இந்த தளத்திற்கு செல்ல - http://pixlr.com/editor/Share |

Get Live Score