தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

(படித்ததில் சுவைத்தது) போட்டோஷாப் ஸ்டைல் எழுத்துக்கள் -பாகம் 1


புகைப்படம் எவ்வளவு முக்கியமோ அதைப்போல் அதில் எழுதும் எழுத்துக்களும் முக்கியம். அந்த எழுத்துக்களை நாம் விதவிதமான ஸ்டைலில் கொண்டுவரலாம்.இங்கு உங்களுக்கு 25 ஸ்டைல் எழுத்துக்களை இணைத்துள்ளேன். 1 எம்.பி. கொள்ளளவு கொண்ட அதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இந்த ஸ்டைல் எழுத்துக்களை டவுண்லோடு செய்து பின்னர் உங்கள் போட்டோஷாப்பில் இணைத்துக்கொள்ளவும. இப்போது வேண்டிய புகைப்படத்தை திறந்துகொள்ளவும்.வேண்டிய வார்த்தைகளை தட்டச்சுசெய்துகொண்டு இந்த ஸ்டைலை கிளிக் செய்யவும. உங்களுக்கு விதவிதமான ஸ்டைலில் எழுத்துக்கள் காட்சியளிக்கும். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.ஒரே வார்த்தையை விதவிதமான ஸ்டைலில் கீழே கொடுத்துள்ளேன்.
இதில்இணைத்துள்ள விதவிதமான எழுத்துக்களின் ஸ்டைலினை கீழே காணவும்.

இதனை போட்டோஷாப்பில் எவ்வாறு இணைப்பது என்பதனை 
அடுத்தபதிவில் பதிவிடுகின்றேன்.பயன்படுத்திப்பாருங்கள்.

(படித்ததில் சுவைத்தது) போட்டோ மார்ப்சினிமாவில் - விளம்பரங்களில் நாம்

போட்டோக்கள் மாறுவதை பார்த்திருப்போம்.

உதாரணத்திற்கு படையப்பா படத்தில்

ரஜினி பாடும் சிங்க நடை போட்டு 

சிகரத்தில் ஏறு என்கின்ற பாடலில்

ரஜினி முகம் குழந்தை முகமாகவும் -

புலி முகமாகவும் மாறுவதை பார்த்திருப்

பீர்கள் . அது போல் நாமும் நமது போட்டோ

வில் எப்படி செய்வது என பார்க்கலாம்.

முதலில் ஒரே அளவிளான இரண்டு புகைப்

படத்தை எடுத்து உங்கள் கணிணியின்

ஏதாவது போல்டரில் சேமித்து வைத்துக்

கொள்ளுங்கள்.

இந்த சாப்ட்வேரை முதலில் பதிவிறக்கம்

செய்து உங்கள் கணிணியில் நிறுவிக்

கொள்ளுங்கள்.

இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய


(குறைந்த அளவு இடம்தான்

இந்த சாப்ட்வேர் பிடிக்கும்). பின்னர்

நீங்கள் இதை திறக்கையில் அதில் உள்ள

மாதிரி படம் உங்களுக்கு கிடைக்கும்.இதன் கீழ்புறம் பார்த்தால் உங்களுக்கு 

Play பட்டன் இருக்கும். அதை Play 

செய்யுங்கள். உங்களுக்கு ஒரு ஐடியா

கிடைக்கும். இனி இதுபோல் நமது

புகைப்படத்தை எப்படி கொண்டு வருவது

என பார்க்கலாம்.


இதன் வலப்புறம்பார்ததால் உங்களுக்கு இந்த

காலம் தெரியும். அதில் உள்ள New Project

கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு மூன்று வித

மான Sequence கள் கிடைக்கும்.முதலில் உள்ள Morph Sequence ஆனது 

உங்கள் படத்திலிருந்து மற்ற ஒரு 

படத்திற்கு மாற பயன்படுவது. அல்லது மற்ற

ஒரு படத்திலிருந்து உங்கள் படம் மாற பயன்

படுவது.

அடுத்து உள்ள Warp Sequence ஆனது 

உங்கள் படத்திலேயே நீங்கள் சிரிக்க

கண்ணடிக்க பயன் படுவது.

அடுத்து உள்ள Zoom Pan Sequence ஆனது

உங்கள் படத்தை Zoom செய்ய பயன் படுகிறது. 

இப்போது நான் New Project கிளிக் செய்து

அதில் Zoom Pan Sequence தேர்வு செய்துள்ளேன்.

உங்களுக்கு கீழ்கண்ட வாறு படம் வரும்.


இப்போது மேல்புறம் பார்த்தீர்களே யானல்

உங்களுக்கு இந்த மாதிரியான காலம்

தென்படும்.அதில் Projects,Immages,Controls,

Play என நான்கு காலங்கள் தென்படும்.இதில் உள்ள Immages கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு இந்த மாதிரி சாரளம் வரும்.இப்போது மீண்டும் வலப்புறம் பார்த்தால்

உங்களுக்கு கீழ்கண்ட காலம் தெரியும்.

அதில் உள்ள Import Image - ஐ நீங்கள்

கிளிக் செய்து நீங்கள் ஏற்கனவே கணிணியில்

சேமித்துவைத்துள்ள படத்தை தேர்வு செய்யவும்.

இப்போது நீங்கள்தேர்வு செய்த படமானது

இரண்டு பக்கத்திலும் வருவதைக்காணலாம்.


இப்போது இந்தப்படங்களை பாருங்கள். அதை

சுற்றி சிவப்பு நிறக்கட்டம் உள்ளதை காண்பீர்கள்.

இது தான் நமது படத்தை எடிட் செய்ய பயன்

படுவது. இதில் முதல் படத்தில் உள்ள 

சிவப்பு கட்டத்தை விட்டுவிடுங்கள். அடுத்துள்ள

படத்தின் சிகப்பு நிற கோட்டில் நடுவில் உள்ள

நீல நிறத்தின் மீது கர்சர் வைத்து தள்ளி 

வாருங்கள். இப்போது உங்களுக்கு சிவப்பு

கட்டம் சுருங்கி வருவதை பார்ப்பீர்கள். 


இப்போது நான் முகத்தை மட்டும் க்ளோசப்பில்

கொண்டு வந்துள்ளேன்.இனி மேல்புறம் உள்ள

Immages அடுத்துள்ள Control -ஐ கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு கீழ்கண்டவாறு படம் கிடைக்கும்.


இப்போது நீங்கள் வலப்புறம் பார்த்தால் உங்களுக்க

கீழ்கண்ட வாறு காலம் கிடைக்கும்.


அதில் Start Delay,Middle Delay,End Delay,Play Time

மற்றும் Play Speed கிடைக்கும். இதில் ஓவ்வொரு

ஆப்ஷன் கீழ் உள்ள சிலைடரை நகர்த்தி 

படத்தின் வேகத்தை நீங்களாகவே நிர்ணயித்துக்

கொள்ளலாம். இதன் கீழ் உள்ள பிளே பட்டனை

அழுத்தி நீங்கள் உங்கள் படத்தின் ப்ரிவியூ

பார்த்துக்கொள்ளலாம்.

இப்போது மீண்டும் மேல்புறம் உள்ள 

Project கிளிக் செய்யவும்.உங்களுக்கு 

பழைய விண்டோ கிடைக்கும். இதில்

உள்ள Add Sequence கிளிக் செய்யவும்.

உங்களுக்கு Sequence பட்டியல் கிடைக்கும்.

அதில் முதலில் உள்ள Morph Sequence

கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட

விண்டோ ஒன்று ஓப்பன் ஆகும்.


மீண்டும் Immage கிளிக் செய்யவும். உங்களுக்கு இந்த 

மாதிரியான விண்டோ ஓப்பன் ஆகும். இப்போது வலப்புறம் உள்ள End Immage -ஐ 

கிளிக் செய்யவும். நீங்கள் தேர்வு செய்துள்ள

படத்தை கிளிக் செய்யவும்.உங்களுக்கு மேற்கண்டவாறு படம் கிடைக்கும்.

இதில் முதல் இரண்டு படங்கள் கிளியராகவும்

கீழ் உள்ள படம் குழம்பியுள்ளதையும் பார்க்கலாம்.

அடுத்து இப்போது Control -ஐ கிளிக் செய்யவும்.

இப்போது மீண்டும் உங்களுக்கு மேற்கண்ட

விண்டோ ஓப்பன் ஆகும். இப்போது உங்கள்

மவுஸை முதல் படத்தின் அருகே கொண்டு

சென்றால் உங்கள் மவுஸானது பென்சில்

போல் மாறும். இப்போது நீங்கள் முதல் படத்தில்

முகம் முழுவதையும், அடுத்து புருவங்கள்,

மூக்கின் நுனி, வாய், நெற்றிப்போட்டு என

புள்ளிகள் வையுங்கள். இப்போது இரண்டாவது

படத்தை பார்த்தீர்களே யானல் உங்களுக்கு

அதுபோல் புள்ளிகளும் காணப்படும். 

இப்போது இரண்டாவது படத்தின் அருகே

கர்சரை கொண்டு செல்லுங்கள். ஏதாவது

ஒரு புள்ளியை தேர்ந்தேடுங்கள். இப்போது

உங்கள் கர்சரானது ஒரு கையாக மாறும்.

முதல் படத்தை பாருங்கள். நீங்கள் தேர்வு

செய்த புள்ளி மட்டும் பிரகாசிப்பதை பார்ப்பீர்கள்.

இப்போது இரண்டாவது படத்தில் உள்ள 

புள்ளியை முதல் படத்தில் உள்ள உருவத்திற்கு

எற்ற இடத்தில் நகர்த்துங்கள்.(உதாரண்த்திற்கு

நீங்கள் முதல் படத்தில் நெற்றிப்பொட்டை

தேர்ந்தெடுத்தால் அடுத்த படத்தில் உள்ள

புள்ளியை நெற்றிப்பொட்டுக்கு நகர்த்துங்கள்.

முதல் படத்தில் மூக்கின் நுனியில் புள்ளி

வைத்தால் இரண்டாவது படத்திலும் உள்ள

புள்ளியையும் மூக்கின் நுனிக்கு நகர்த்தவும்)


இதில் உள்ள பிளே பட்டனை அழுத்தி ப்ரிவியூ 

பார்த்துக்கொள்ளுங்கள். இதில் உள்ள 

வேகங்களை முன்பு சொன்னவாறு நீங்கள்

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வாறு 

நிர்ணயித்துக்கொள்ளுங்கள்.

இப்போது மீண்டும் Projects தேர்வு

செய்யுங்கள். மீண்டும் Add Sequence

தேர்வு செய்யுங்கள். வரும் காலத்தில்

இப்போது Wrap Sequence தேர்வு செய்யுங்

கள். இப்போது உங்களுக்கு இந்த மாதிரி

படம் கிடைக்கும். இதிலும் மீண்டும்

Controls கிளிக் செய்து புள்ளிகள் வைக்கவும்.


இதில் கண்களுக்கு மேல்புறம் நெருக்கமான

புள்ளிகளும் கண்ணின் கீழ்புறம் இடைவெளி

விட்டும் புள்ளிகள் வைக்கவும். இனி இடப்புறம்

உள்ள படத்திற்கு வரவும். இதில் கண்ணில்உள்ள

ஒன்று விட்ட புள்ளிகளை கீழ்புறம் உள்ள 

புள்ளிகளின் இடை இடையே நகர்த்தவும்.

அதுபோல் வாயின் ஓரம் புள்ளிகள் வைத்து

அடுத்த படத்தில் அந்த புள்ளிகளை மேல்புறம்

நகர்த்துங்கள். இது பழக பழக தான் ந்னறாக

வரும். இப்போது பார்ததீர்களேயானல்

உங்கள் படம் கண் சிமிட்டி லேசாக புன்னகை

செய்வதை காணலாம்.வேக கட்டுப்பாடடை

நிங்கள் நிர்ணயித்துக்கொள்ளுங்கள். 

கடைசியாக மேல்புறம் உள்ள Play பட்டனை

அழுத்துங்கள். உங்களுக்கு இதுவரை செய்த

படங்கள் Preview வாக தெரியும்.

நீங்கள் மீண்டும் Project கிளிக் செய்ய 

உங்களுக்கு கீழ்கண்ட படம் ஓப்பன் ஆகும்.

இதுவரை நீங்கள் செய்த படங்களின்

தொகுப்பை கீழே காணலாம்.

இதில் நீங்கள் எந்த பாகத்தின் பட பிரிவியூ

வேண்டுமோ அதை கிளிக் செய்து 

பிளே செய்து பார்க்கலாம்.

 இதன் வலப்புறம் பார்த்தால் உங்களுக்கு

 இதைசேமிக்கும் வசதி இருக்கும்.


இதில் உள்ள Return கிளிக் செய்தால் நீங்கள்

உருவாக்கிய படம் மீண்டும் மீண்டும் வரும்.

அடுத்து Set Size . இதை கிளிக் செய்து 

படத்தின் நீள அகலத்தை நீங்கள் தேர்வு 

செய்து கொள்ளலாம். அதே போல் 

நீங்கள் விரும்பிய வார்த்தைகளையும்

பின்புற படங்களையும் மாற்றிக்கொள்ளலாம்.

இதில் உள்ள Print Frame - Save Frame 

உபயோகம் நமக்கு Adope Photo Premiere 

Software -ல் உபயோகப்படும். அதை 

பின்னர் பார்க்கலாம். இறுதியாக Save

Animation. இதை கிளிக் செய்தால் உங்களுக்கு

ஏழு வகையான பார்மெட்டுக்கள் கிடைக்கும்.

நாம் இதில் உள்ள AVI Formet தேர்வுசெய்து

ஓகே கொடுத்துள்ளேன். இந்த படம் கணிணியில்

ஏதாவது ஒரு டிரைவில் சேமிக்கவும்.

சில் நிமிடங்கள் காத்திருக்கவும். இப்போது

உங்கள் படம் ரெடி.

நான் தயாரித்த படத்தை நீங்கள் மேற்புறம்

உள்ள வீடியோ பார்மட்டில் பார்க்கலாம்.

இது வரை எனது புகைப்படத்தை பதிவில்

போட்டதில்லை. இந்த 100 வது பதிவில்

எனது மகன் உருவில் இருந்து மாறும்

புகைப்படம் அடியேன் தான்.

(பார்க்க சுமாராக இருக்கின்றேனா?)

பின் குறிப்பு:- இதில் உள்ள ஒவ்வொரு

Sequence -ஐ யும் தனி தனியேவும்

நீங்கள் பயன்படுத்தி வீடியோவாகவும்

சேமிக்கலாம்.

(படித்ததில் சுவைத்தது) பதிவுகளில் சில தவறுகள்பதிவர்கள் செய்யும் சில அடிப்படை தவறுகளை பற்றி பார்த்து கொண்டிருக்கும் இந்த தொடரில் நாம் பார்க்க இருப்பது தள வடிவமைப்பை பற்றி. பதிவர்களே உங்கள் பிளாக் முழுவதும் விட்ஜெட்டுக்களாக நிரப்பி உங்கள் பிளாக்கை குப்பை கூடை போல வைத்து இருக்கிறீர்களா? ஒவ்வொரு நேரமும் உங்கள் பிளாக் திறக்க வெகு நேரம் ஆகிறதா? டெம்ப்ளேட் தேர்வு செய்வதில் குழப்பமாக உள்ளதா? இந்த கேள்விகளுக்கான பதில் ஆம் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. முந்தைய பாகத்திற்கு செல்ல சில பதிவர்கள் செய்யும் தவறுகள் (பாகம் 1) இந்த லிங்கில் செல்லுங்கள்.
தளத்தை வடிவமைக்கும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

டெம்ப்ளேட் தேர்வு செய்தல்:
பிளாக்கர் வலைப்பூக்களுக்கு ஆயிரமாயிரம் இலவச டெம்ப்ளேட்கள் உள்ளன. ஆனால் டெம்ப்ளேட்டை தேர்வு செய்யும் பொழுது பின்புறத்தில் புகைப்படம் ஏதும் இல்லாமல் முற்றிலும் வெண்மை நிற டெம்ப்ளேட்கள் தேர்வு செய்வது நல்லது. பெரும்பாலான வாசகர்களும் வெண்மை நிறத்தையே விரும்புகின்றனர். வெண்மை நிறத்தை தேர்வு செய்வதால் வாசகர்களுக்கு எழுத்துக்கள் படிப்பதில் உள்ள சிரமங்களை(கண்கள் கூசுவது) தவிர்க்கலாம். மற்றும் வலைப்பூவும் வேகமாக திறக்க இந்த வகை டெம்ப்ளேட்கள் உதவுகின்றன. டெம்ப்ளேட் அழகை பார்க்காமல் பல்வேறு வசதிகள் உள்ளதா என்பதை மட்டும் பார்த்து டெம்ப்ளேட் தேர்வு செய்யவேண்டும்.


விட்ஜெட்கள் பொருத்துதல்:
பதிவுலகில் நான், பொன்மலர், பலே பிரபு, வைரை சதீஷ் போன்ற மேலும் பல  நண்பர்களும் பிளாக்கர் தொழில்நுட்ப பதிவு எழுதுகின்றனர். நாங்கள் படித்ததையோ அல்லது தெரிந்ததையோ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஒரே விட்ஜெட்டை பலரும் வெவ்வேறு வடிவங்களில் பதிவாக போடுவோம். ஆனால் உங்கள் வலைப்பூவிற்கு எந்த விட்ஜெட் பொருத்தமாக இருக்கும், எந்த விட்ஜெட் இணைத்தால் வாசகர்கள் பயன்பெறுவார்கள் என்பதை உறுதி செய்து அதில் உங்களுக்கு தேவையான ஒரு விட்ஜெட்டை மட்டும் வலைப்பூவில் சேர்க்க வேண்டும்.

அனைத்து விட்ஜெட்டுக்களையும் உங்கள் வலைப்பூவில் சேர்த்தால் உங்கள் பிளாக் திறக்க அதிக நேரம் எடுத்து கொள்வதால் பிளாக் வரும் வாசகர்கள் கடுப்பாகி திரும்பி சென்று விடுவார்கள். முடிந்த அளவு பிளாக்கர் தளத்தின் Default விட்ஜெட்டுக்களை மட்டுமே வைத்து கொள்வது நல்லது. அவசியமில்லாமல் மூன்றாம் தள விட்ஜெட்டுக்களை சேர்க்க வேண்டாம்.


அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்:
ஒரு சிலர் தங்கள் பிளாக் அழகாக இருக்க வேண்டும் என நினைத்து பல தேவையில்லாத விட்ஜெட்டுக்களை வலைப்பூவில் இணைத்து கொள்வார்கள். உதாரணமாக ஒன்றுக்கும் அதிகமான Visitor Counters, பனி கொட்டுவது போன்று, மவுஸ் முனையை மாற்றுவது. உண்மையை சொல்லப்போனால் இந்த விட்ஜெட்டுக்களால் 1% நன்மை கூட உங்கள் வலைப்பூவிற்கு இல்லை. உங்கள் வலைப்பூவிற்கு வரும் வாசகர்கள் யாரும் உங்கள் பிளாக்கின் அழகை வைத்து வருவதில்லை உங்கள் பிளாக்கின் பதிவுகளுக்காக தான் வருகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். மாறாக ஒரு சிலருக்கு இவைகள் வெறுப்பாக தான் சென்று முடியும்.

அதற்க்காக அழகாகவே இருக்க கூடாதான்னு கேட்கிறீங்களா? அழகாக இருக்க கூடாதுன்னு நான் சொல்லவே இல்லையே. 95% வாசகர்களுக்கும் 5% அழகுக்கும் முக்கியத்துவம் கொடுங்கன்னு தான் சொல்றேன்.

பிளாக்கில் இருக்க வேண்டிய முக்கியமான விட்ஜெட்டுகள் என்ன:
குறிப்பிட்ட சில விட்ஜெட்டுக்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அவை என்னனென விட்ஜெட்டுகள் என்பதை கீழே பாருங்கள்.
1. Popular Post Widget
2. Email subscription Widget
3. Social Networking Sites Widget
4. Follower Widget
5. Blog Archive Widget
6. Search Box Widget

இந்த 6 விட்ஜெட்டுகள் கண்டிப்பாக உங்கள் பிளாக்கில் இருக்க வேண்டும். மற்றும் இதனோடு இந்த விட்ஜெட்டை சேர்த்தால் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கும் மற்ற விட்ஜெட்டுகளையும் வைத்து கொள்ளுங்கள்.

இந்த தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கீழே உள்ள சமூக தளங்களில் பகிருங்கள்.
Share |

Get Live Score