தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

(படித்ததில் சுவைத்தது) டிரையல்விஷன் சாப்ட்வேர்களின் காலகெடு தேதியை நீடிக்க.

சாப்ட்வேர் சோதனை பதிப்பாக வாங்குவோம். சில நாட்களில் அதற்கான நேரம் முடிந்ததும் ஒப்பன் ஆகாது.நாட்களை நீடிக்க(நேரத்தை நீட்டிக்க) - என்றும் மார்க்கென்டேயனாக சாப்ட்வேர் நமக்கு ஒத்துழைக்க இந்த சாப்ட்வேரை நாம் நமது கணிணியில் இன்ஸ்டால் செய்யவேண்டும்.1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் கணிணியில் உள்ள டிரையல் விஸன் சாப்ட்வேரின் .Exe பைலை  நீங்கள் தேர்வு செய்யுங்கள்.புதிய தேதியினை தேர்வு செய்யுங்கள். பக்கத்திலேயே உங்களுக்கு காலண்டர் கொடுக்கப்பட்டிருக்கின்றது பாருங்கள்.
தேவையான தேதியை தேர்வு செய்யுங்கள்.Enter a name for create desktop icon என்கின்ற விண்டோவில் ஒரு புதிய பெயரை சாப்ட்வேருக்கு நிறுவுங்கள்(வையுங்கள்). அடுத்து்ள்ள Create Desktop Short-cut  கிளிக் செய்யுங்கள் இப்போது உங்கள் டெக்ஸ்டாப்பில் சாப்ட்வேர் அமரந்துகொள்ளும். இப்போழுது நீங்கள் நீடிப்பு செய்த சாப்ட்வேரின் பழைய Desktop short cut.Startup முதலியவற்றை நீக்கி விடுங்கள். இப்போது நீங்கள் தேர்வு செய்த ஐ-கானை கிளிக்செய்யுங்கள்.
உங்களுக்கு சாப்ட்வேர் தடையில்லாமல் வேலை செய்யும்.

நேரம் சொல்லும் கடிகாரம்.

பேசும் நோட்பேட் பார்த்தோம். இன்று நேரம் சொல்லும் கடிகார சாப்ட்வேர் பற்றி பார்க்கலாம்.5 எம்.பி. கொள்ளளவு உள்ள சிறிய சாப்ட்வேர் மிக சிறப்பான சேவைகள் செய்கின்றது.இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களது டாக்ஸ்பாரில் இது வந்து அமர்ந்துகொள்ளும்.இதை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Say the time கிளிக் செய்ததும் அப்போதைய நேரம் உங்களுக்கு சொல்லும் அதன் கீழ் உள்ள Settings கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் விருப்பமான வகை யின் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்துகொள்ளவும்.
இதில் உள்ள new reminder நமக்கு தேவையான தகவலை தேவையான நேரத்திற்கு ஒலிபரப்ப செய்யலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
வீட்டுக்காரம்மா சினிமாவுக்கு அழைத்து செல்ல சொல்லியிருப்பார்கள். வேலை மும்முறத்தில் நாம் மறந்து பின்னர் வீட்டில் சென்று டோஸ்வாங்குவோம்.அந்த சிரமம் குறைக்க இதில நாம் செட் செய்து கொள்ளலாம்.நான் சினிமாவுக்கு செல்வதை இதில் ரிமைண்டராக செட் செய்துள்ளேன். அந்த நேரம் வந்ததும் உங்களுக்கு அலாரம் அடித்து உங்களுக்கு நினைவுட்டும்..கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் வேண்டிய இசையை நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.நமக்கு கீழ் வேலை செய்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட பைலை நமக்கு கொண்டுவந்து தருகிறார்களோ இல்லையோ இந்த சாப்ட்வேர் நமக்கு குறிப்பிட்ட நேரத்தில் கொண்டுவந்து சேர்த்துவிடும்.அதைப்போலவே URL லிங்க் கும் நாம் கொடுக்கலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
உலகின் வெப்ப நிலையை யும் நாம் அறிந்து கொள்ளலாம்.
இதைப்போலவே நமக்கு நோட் வசதியும உள்ளது. தேவையான தகவலை நோட்டில் குறித்துவைத்தால் குறிப்பிட்ட நேரத்தில் நமக்கு நோட் ஓப்பன் ஆகும்.அதைப்போலவே இதில் காலண்டரையும் கொண்டுவரலாம். வருடம் ஆரம்பித்து எவ்வளவு நாள் - வருடம் முடிய எவ்வளவு நாள் (புது வருடம் பிறக்க எவ்வளவு நாள்) என அறிந்துகொள்ளலாம்.நிலவின் அன்றைய தோற்றத்தையும்அறிந்துகொள்ளலாம்.
உலகின் அன்றைய பகல் -இரவு நேரப்பொழுதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.அதைப்போல உலக டைம் கன்வர்ட்டரும் இதில இணைக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில Stopwatch & Countdown Clock இதில் உள்ளது. குறிப்பிட்ட நேரம் செட் செய்து பைலை நேரடியாக திறக்குமாறு செய்யலாம். உடன் இனிய இசையையும் ஒலிக்குமாறு செய்யலாம்.
அனைத்து வசதிகளையும் பயன்படுத்திப்பாருங்கள். 

Share |

Get Live Score