தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

(படித்ததில் சுவைத்தது) பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற


கிராமப்புறங்களில் கிணறு தூர் வாருவதை பார்த்திருப்பீர்கள். எப்போதோ கிணற்றில் போட்ட பொருள்கள் ஒவ்வொன்றாக கிடைக்கும்.அதைப்போலவே இந்த சாப்ட்வேரில் நாம் நமது மெமரி கார்ட்,பென்டிரைவ்,ஹாரட்டிரைவ் என அதில் உள்ள அனைத்து தகவல்களையும் -பார்மெட் செய்தபி்ன் சுலபமாக பெறலாம்.இந்த சாப்ட்வேர்ரானது இமெஜ் பைல்,டேடா பைல்,வீடியோ பைல்,மற்றும் ஆடியோ பைல்களை மீட்டுகொடுக்கும்.இந்த சாபட்வேரிலிருந்தும் தகவல்களை பெற முடியாமல் போனால் அவ்வளவுதான்.(சில பென்டிரைவ் மற்றும் மெமரி கார்ட் சர்வீஸ்க்கு கொடுக்கும் முன் இந்த சாப்ட் வேர் மூலம் பரிசோதனை செய்துவிட்டு கொடுப்பது நமக்கு நல்லது) சரி 4 M.P. கொள்ளளவு உள்ள இந்த சாப்ட் வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Select a Drive கிளிக்செய்யுங்கள் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான டிரைவை தேர்வு செய்து ஒன்றாம் எண்ணை ஒ.கே. கொடுங்கள்.கீழே உள்ள விண்டோ தோன்றும்.
உங்களை Confirm செய்ய சொல்லி மெசெஜ் வரும் . யெஸ் கொடுங்கள்.
அவ்வளவுதான் .உங்கள் டிரைவிலிருந்து தகவல்கள் பெற ஆரம்பிக்கும்.
ஸ்கேன் பண்ணி முடிந்ததும் டீப் ஸ்கேன் செய்யவா என கேட்கும் அதற்கும் யெஸ் என பதில் அளியுங்கள்.
அதிலுள்ள ப்ரிவியுவினை பாருங்கள்.நீங்கள் எப்போதோ பார்மெட் செய்த பைல்கள் தெரியும்.
ஸ்கேன் பண்ணி முடித்ததும் வந்துள்ள படங்களை பாருங்கள்.(வெய்யிலுக்கு இதமாக ஐஸ்கிரீம் படங்களை பதிவிட்டுள்ளேன்)
இதில் உள்ள அட்வான்ஸ் ஆப்ஷனை பயன் படுத்தி உங்களுக்கு மீட்டுஎடுத்த தகவல்கள் எங்கு சேமிக்க வேண்டுமோ அங்கு சேமிக்கலாம். அதைப்போல மீட்டு எடுத்த தகவல்களை சிடியாக வேண்டுமானாலும் இந்த சாப்ட்வேர்மூலமே காப்பி செய்து கொள்ளலாம்.பயன்படுத்திப் பாருங்கள்.
ஓட்டு பட்டையில் ஓட்டு போட்டு செல்லுங்கள்.

Share |

Get Live Score