தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

படித்ததில் சில உங்களுக்கு தினமும் ஜாதகப்பலன்கள்கடந்தவாரம் குருபெயர்ச்சி - தொடர்நது ராகு -கேது பெயர்ச்சி என எல்லோரும் பெயர்ச்சிபலன்கள் பார்த்தனர் நாமும் ஏதாவது ஜோதிடசம்பந்தமாக போடலாம் என்று இந்த சின்ன சாப்ட்வேரை இங்கு பதிவிடுகின்றேன்.10 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள் இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வரும் விண்டோவில் தேவையானதை தேர்வு செய்யுங்கள்.
வரும் விண்டோவில் ஜாதக கட்டத்தினை வடஇந்திய ஸ்டைலிலோ - தென் இந்திய ஸ்டைலையோ முடிவு செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில உள்ள டேப்பில் எது தேவையோ அதனை கிளிக்செய்யுங்கள்.
அன்றைய பஞசாங்க விவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். இது குழந்தை பிறப்பு முதல் பூப்படைவது வரை பயன்தரும்.வேறு முக்கிய நிகழ்வினையும் குறிந்துகொள்ள அன்றைய பஞசாங்கம் பலன்தரும்.
பிறக்கும்போது எந்தஎந்த கிரகங்கள் எந்த எந்த இடங்களில் இருந்தது என்பதை அறிந்துகொள்ளலாம்.
முந்தைய தேதிபற்றி நமக்கு விவரங்கள் வேண்டுமானாலும் அதில் வலது மூலையில் உள்ள காலண்டரை தேர்வு செய்வது மூலம் அறிந்துகொள்ளலாம்.
அந்த தேதியில் உள்ள ஜாதககட்டத்தினையும் எளிதில கொண்டுவரலாம்.
சாதாரணமாக நாம் ராகுகாலம் என்றால் காலை 7-30 மணி முதல் 9 மணி வரை என குறிப்பிடுவோம். ஆனால் இந்த சாப்ட்வேரில் நிமிடங்கள் வித்தியாசமாக வருகின்றது. நீங்கள் ராகுகாலம் - எமகண்டம் பார்த்து நல்ல காரியம் செய்பவராக இருந்தால் இந்த சாப்ட்வேரை உபயோகிக்கலாம்.
Share |

Get Live Score