தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

படித்ததில் சுவைத்தது

நமது புகைப்படங்களில் விதவிதமான வீடியோ எபெக்ட் கொண்டுவர பலவிதமான சாப்ட்வேர்கள் உள்ளன. ஆனால் சிறிய அளவில் நிறைந்த பலன்கள் கொடுக்கக்கூடியதாக இந்த சாப்ட்வேர் உள்ளது. உங்கள் குழந்தைகள் கூட இந்த சாப்ட்வேர் மூலம் சிலைட் ஷோ உருவாக்க்லாம். 2 எம.பி. கொளளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய  இங்கு கிளிக்செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் வலதுகை கீழ்புறம் + குறியீட்டுடன் புகைப்படம் இருக்கும். அதனை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தினை தேர்வு செய்யவும்.அதன் கீழேயே இசைகுறியீட்டுடன் உள்ளதை தேர்வு  செய்து உங்கள் புகைப்படத்திற்கு என்ன பாடல்வேண்டுமோ அதனை தேர்வு செய்யுங்கள்.
Moleskinsoft SlideShow Maker screenshot 1 - This is the main window of Moleskinsoft SlideShow Maker, where you will be able to add the images of interest.
ஒவ்வொரு புகைப்படத்திற்கும் புகைப்படம் தோன்றும் நேரத்தை நாமே நிர்ணயிக்கலாம்.
இதில் உள்ள Visual effects கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் மொத்தம் ஆறுடேப்புகள் உள்ளன.புகைப்படத்திற்கு பெயர் கொண்டுவருவதில் இருந்து  தேவையான எபெக்ட்களை நாம் எடுத்துவரலாம்.Framing வேண்டிய அளவில் கொண்டுவரலாம்..
Moleskinsoft SlideShow Maker screenshot 2 - Moleskinsoft SlideShow Maker will also enable you to personalize your slideshows with a few visual effects.
Text கொண்டுவர:-
Brightness கொண்டுவர:-
Moleskinsoft SlideShow Maker screenshot 5
Colour Effects :-கொண்டுவர
Moleskinsoft SlideShow Maker screenshot 6
ஒவ்வொரு ப்ரேமும் தோன்றும் நேரம் கொண்டுவர:-
Moleskinsoft SlideShow Maker screenshot 7
நாம் அனைத்து பணிகளும் செய்துமுடி த்தவுடன் இதிலிருந்து நேரடியாக சிடியாக மாற்றும் வசதியும் இதில் உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்..கருத்துக்களை கூறுங்கள்.

We Can End Poverty: Millennium Development Goals and Beyond 2015

http://www.youtube.com/v/Sj6q0Apd_cs?version=3&autohide=1&showinfo=1&attribution_tag=4HXcFT5Ys_3u75UTZ2PAHQ&autohide=1&autoplay=1&feature=share

Screen Saver-ஸ்கிரீன் சேவரில் வீடியோ வரவழைக்க

ஸ்கிரீன் சேவரில் நாம் புகைப்படங்களை மாற்றுவதை பார்த்துள்ளோம். அதைப்போல புகைப்படங்களுடன் இசையையும் ஒலிப்பதை பார்த்துள்ளோம். ஆனால்இந்த சாப்ட்வேரில் ஸ்கிரீன் சேவராக வீடியோ படம் ஓடுவதை காணலாம்.இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.3 எம்.பி. கொள்ளளவு உள்ள இது இலவச சாப்ட்வேரே..இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு டாக்ஸ்பாரில் கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
இதில் உள்ள Settings கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும். இதில் கம்யூட்டர் எவ்வளவு நேரம் காத்திருந்தால் உங்களுக்கு வீடியோ வரவேண்டுமோ அந்த நேரத்தை குறிப்பிடவும்.ஒலியையும் மீண்டும் கணிணி இயல்பு நிலைக்கு திரும்புவதையும் இதில செட் செய்திடலாம்.
டாக்ஸ்க்பாரில் உள்ள Main என்பதனை கிளிக்செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் வீடியோ உள்ள போல்டரை தேர்வு செய்துகொள்ளலாம். அதைப்போல ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோ போல்டர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
நீங்கள் செட் செய்த வீடியோவானது குறிப்பிட்ட நேரம் நீங்கள் கம்யூட்டருக்கு எந்த வேலையையும் கொடுக்காமல் இருந்தால் ஸ்கிரீன்சேவராக வீடியோ படம் ஓட ஆரம்பிக்கும்.

படித்ததில் சுவைத்தது

<span title=
கோடிகணக்கில் பணத்தை செலவு செய்து திரைப்படத்தை
எடுப்பவர்கள் படம் நல்ல ரிசல்ட் வரும்வரை சரியாக
தூங்க மாட்டர்கள். அவர்கள் மனம் நிலைகொள்ளாது. அதை போல்
நமது பதிவுலக நண்பர்களும். அவரவர் பதிவுகளுக்கு எவ்வளவு
ஓட்டுக்கள் வந்துள்ளது. கருத்துக்கள் எத்தனை வந்துள்ளது.
முன்னணி பதிவில் வந்துவிட்டதா? என நல்ல ரிசல்ட் வரும்வரை
தவிக்கின்றனர்.

சரி இதற்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம்? நமது பதிவில்
வாசகர்கள் தமது கருத்துக்களை பதிவிடும் போதே கருத்துக்கள் நமது மெயிலுக்கும்- மெயிலிருந்து நமது செல்போனுக்கும் வருமாறு
செய்யலாம். முதலில் மெயிலிலிருந்து செல்போனுக்கு தகவல்
வருமாறு செய்துக்கொள்ளுங்கள். மெயிலிலிருந்து செல்போனுக்கு
தகவல் வருவது பற்றி அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்.


இப்போது நமது செல்போனுக்கு கருத்துரைகள் வருமாறு செட்
செய்வதைப்பார்க்கலாம். முதலில் உங்கள் பிளாக்கரின் டாஷ்போர்ட்-
அமைப்புகள்-கருத்துரைகள்-கருத்துரை அறிவிப்பு மின்னஞ்சல் -
எதிரில் உள்ள கட்டத்தில் உங்கள் இ-மெயில்முகவரியை
தட்டச்சு செய்து அமைப்புகளை சேமி- அழுத்தி வெளியேறுங்கள்.
கீழ் கண்ட படத்தை பாருங்கள்.

அவ்வளவுதான். இனி உங்களுக்கு பதிவில் கருத்துக்கள் வரும்போது
உங்களுடைய செல்போனுக்கு கருத்துக்கள் வரஆரம்பிக்கும்.

"கெட்டப்பழக்கம் ஏதும் இல்லாதது எனது கெட்டப்பழக்கம் " என
என்னைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதற்கு எனது சகோதரர் என்னிடம்
இருப்பதிலேயே கெட்ட பழக்கம் பதிவில் பதிவிடுவது.
ஒட்டுக்கள் வந்ததா என பார்ப்பது. கருத்துக்கள் என்ன என்ன வந்தது
என் பார்ப்பது...இவைகளை எதிர்பார்ப்பது கெட்டபழக்கம் தானே...
நண்பர் ஓருவர் பதிவிட்டு விட்டு அவசரமாக வெளியூர் சென்று
விட்டார். மணிக்கொருமுறை போன் செய்து -எவ்வளவு ஓட்டு
வந்துள்ளது - கருத்துக்கள் வந்துள்ளதா - யார் யார் கருத்து சொல்லி
உள்ளார்கள் - என்ன கருத்தினை சொல்லியுள்ளார்கள் என என்னிடம்
இணையத்தில் பார்த்து சொல்லசொல்லி கேட்டார். அப்போதுதான்
செல்போனில் கருத்துக்கள் வந்தால் எப்படி இருக்கும் என்கிற
எண்ணம் வந்தது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு.

பதிவை பற்றி நண்பர் எழுதியுள்ள. இந்த பதிவையும் பாருங்கள்

பதிவினை பாருங்கள். பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்கள்.

படித்ததில் சுவைத்தது டெக்டோப்பில் உலகம்

உலகில் எத்தனை நாடுகள் உள்ளன,எத்தனை நகரங்கள் உள்ளன,அவற்றின் மக்கள் தொகை,ஒரு நாட்டிற்கும் மற்றோரு நாட்டிற்கும் இடையில் உள்ள தொலைவு,பகலில் உலகின் தோற்றம் - இரவில் உலகின் தோற்றம் என அனைத்தும் இந்த சாப்ட்வேரில் உள்ளது. தாய்நாட்டினை விட்டு பணியின் காரணமாக வெளியில் வேலை செய்யும் நண்பர்கள் தங்கள் நாட்டிலிருந்து பணிசெய்யும் நாடுவரை உள்ள தொலைவை சுலபமாக தெரிந்துகொள்ளலாம். இந்த சாப்ட்வேரை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு வி்ண்டோ ஓப்பன் ஆகும். இதில் மேல்புறம் கீழ்கண்ட மெனுபார் இருக்கும்.
இதில் நாடுகளை தேர்வு செய்யவும். மொத்தம் 270 நாடுகளின் பட்டியலும் அதன் Longitude - Latitude - மற்றும் அதன் மொத்த பரப்பளவும் மக்கள் தொகையும் இதில் விவரமாக கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அடுத்து நகரம் இதில் மொத்தம் 33,000 நகரங்களின் விவரங்கள் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
மெனுபாரினை கிளிக் செய்ய உங்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும் தேவையானதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
இரவில உலகின் தோற்றம் படம் கீழே:
பகலில் உலகின் தோற்றம் கீழே:-
நீங்கள் உலகின் எந்த இடத்தில் வைத்தாலும் அந்த இடத்தின் பெயர்,மக்கள் தொகை,என அனைத்துவிவரங்களும் நமக்கு கிடைக்கும். அதுபோல நாம் வேலை செய்யும்  இடத்திற்கும் நமது சொந்த நாட்டிற்கும் இடையில் உள்ள தொலைவின் கிலோமீட்டரையும் எளிதில் அறிந்துகொள்ளலாம்.நாம் வேலைசெய்யும் இடத்தை மவுஸால் கிளிக்செய்து பின்னர்நமது இல்லம் இருக்கும் இடத்தை கிளிக்செய்தால் இடைப்பட்ட தொலைவு எவ்வளவு கிலோமீட்டர் என தெரியவரும்.பதிவினை
அன்பின்
சுபாஷ்


have a super

செல்போனுக்கு முறையாக ரீ-சார்ஜ் செய்தால் தான் அதன்பணிகளை முறையே செய்யும். அதுபோல் நமது உடலுக்கு மனதுக்கு ரீசார்ஜ் செய்தால்தான் வாழ்க்கை இனிமையாக அமையும். அதற்கு வெளியூரோ -வெளிநாடோ வருடத்திற்கு ஒருமுறை சுற்றுலா சென்றுவந்தால் மனம் மகிழ்ச்சிஅடைவதுடன் உடலும் மகிழும்.அவ்வாறான பயணங்களில் நாம் எடுக்கும் புகைப்படங்களை நம் உறவினர்களுக்கு -நண்பர்களுக்கு அனுப்பி வைக்கலாம். அவ்வாறு எடுக்கப்பட்ட சுற்றுலா புகைப்படங்களை ஸ்லைட்ஷோவாக மாற்ற இந்த தளம் நமக்கு உதவுகின்றது. இந்த தளம் காண நீங்கள் இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஸ்டார்ட் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட புகைப்படங்களின் டெம்ப்ளேட் கிடைக்கும். அதில் உங்களுக்கு விருப்பமானதை கிளிக் செய்யவும்.
அடுத்து உங்கள் புகைப்படங்களை தேர்வு செய்யவும். புகைப்படங்கள் பேஸ்புக்கிலோ - உங்கள் கணிணியிலோ - பிகாஸா மற்றும் பிளிக்கரிலோ இருக்கலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இப்போழுது உங்கள் ஸ்லைட் ஷோவிற்கு பெயரினை வையுங்கள்.ஸ்லைட்ஷோவிற்கு விருப்பபட்டால் இசையையும் சேர்ககலாம்..
அனைத்துபணிகளும் முடிந்தவுடன் அதனை நீங்கள் மற்றவர்களுக்கு இமெயில் மூலமாக எளிதில் பகிர்ந்துகொள்ளலாம்.கீழே நான் உருவாக்கிய ஸ்லைட்ஷோவினை பாருங்கள்.
ஸ்லைட்ஷோ உருவாக்கி பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள.

SIMPLE AND SUPER

இன்ஸ்டண்ட் உணவு வகைகளை கேள்விப்பட்டிருப்பீர்கள். உடனடி உப்புமா - உடனடி புளியோதரை என உணவு வகைகள் உள்ளன. அனைத்து உணவுபொருட்கள் -மசாலா அயிட்டங்கள் தேவையான விகிதத்தில் கலவை செய்து பாக்கெட்டில் அடைத்துவைத்திருப்பார்கள். தேவையான அளவு தண்ணீர்வைத்து நாம் அந்த பாக்கெட்டை கட்செய்து அதில் போட்டு உணவு செய்து சாப்பிட வேண்டியதுதான்.போட்டோஷாப்பில் அதைப்போல் சிறுசிறு வேலைகளை செய்து அதை Action என பெயரிட்டு நமக்கு அளிக்கின்றார்கள்.ரெடிமேட் ஆக்ஸனை நாம் நமது போட்டோஷாப்பில் இன்ஸ்டால் செய்து தேவையான படத்துக்கு தேவையான ஆக்்ஷனை நாம் பயன்படுத்திகொள்ளலாம்.(விளக்கம் புரிந்திருக்கும் என எண்ணுகின்றேன்) சரி இனி இந்த Action -ஐ நமது போட்டோஷாப்பில் எப்படி இணைப்பது - அதை எவ்வாறு பயன்படுத்துவது என பார்க்கலாம்.
முதலில் இங்கு சென்று இந்த Photo Box Action -ஐ டவுண்லோடு செய்து கொள்ளுங்கள்.19 கே.பி. அளவுள்ள இது முற்றிலும் இலவசமே.(டவுண்லோடு செய்ததை டெக்ஸ்டாப்பில் வைத்துக்கொள்ளுங்கள்)
போட்டோஷாப்பினை திறந்துகொள்ளுங்கள்.அதில் நீங்கள் விரும்பும் புகைப்படத்தை தேர்வு செய்து ஓப்பன் செய்து கொள்ளுங்கள். அடுத்து Atl+F9 அல்லது Window சென்று அதில் Action என்பதனை கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள். 
உங்களுக்கு Actions Box ஓப்பன் ஆகும். அதில் மேற்புறம் வலதுபக்க மூலையில் சிறிய முக்கோணம் இருக்கும்.அதை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் Load Actions  என்பதை கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள படத்தை பாருங்கள் .            
இப்போது நீங்கள் சேமித்த இடத்திலிருந்து ஆக்ஸனை தேர்வுசெய்யுங்கள்.(சுலபமாக தேடதான் டெக்ஸ்டாப்பில் வைக்க சொன்னேன்)
இப்போது உங்களுக்கு உங்களுடைய ஆக் ஸன் டூல் ஆக் ஸன் பாக்ஸில் வந்து அமர்ந்துவிடும். இப்போது மீண்டும் சிறிய் முக்கோணத்தை கிளிக் செய்து அதில் முதலில் வரும் பட்டன் மோடு கிளிக் செய்யுங்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள்.
.இப்போது மீண்டும் PhotoBox கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட வாறு படம் வரும். இதில் மூவ்் டூல் மூலம் படத்தின் நடுவில் வருமாறு கட்டத்தை நகர்த்தி கொள்ளுங்கள்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இனி தொடர்ச்சியாக ஓ,கே. தாருங்கள்.
அவ்வளவு தான் படம் ரெடி. கீழே படத்தை பாருங்கள்.
மேலும் சில படங்கள் கீழே-
பொரும்பாலான் போட்டோஷாப் சாப்ட்வேர்களில் நீங்கள் படத்தை தேர்வு செய்து ஆக்ஸனை கிளிக் செய்ததும் தானே சில் நொடிகளில் படம் தயாராகி வந்துவிடும். சில போட்டோஷாப்பில் தான் நாமே ஒ.கே. கொடுக்கவரும்.
பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்தினை கூறுங்கள்.

எனது அம்மா.......!

எனது அம்மா.......!

அம்மா என்னை பத்துமாதம் சுமக்க
நீ பட்டபாடு கொஞ்சமில்ல..
நான் பட்டினிருக்க கூடாதென
பார்த்து பார்த்து உண்ணுகிட்ட

நீ கஸ்டப்பட்டு வேலசெய்த
நான் கரு‌வரையில பார்த்திருந்தேன்
நீ தண்ணீர் தூக்கி போகயில
நோகுதுனு சொல்லிருந்த
என் கைகள் அங்கு நீளமில்ல
அம்மா உனக்கு உதவிசெய்ய....!

நாலு ரொம்ப ஓடுதடி அம்மா...
நான் பிறக்கும் காலத்திற்கு
வயிற்ற பிடிச்சி கத்தயில..
அம்மா என் ரெத்த நாளம்
கொதிச்சதடி..!

கொட்டும் மழை விடிய
கோழியும் தான் கூவ முன்னே
அம்மா என்ற பேரொலியில் - என்னை
பெற்றெடுத்தாள் என்தாயி

நான் பிறக்கும் நேரத்தில
 யாரும்மில்ல பக்கத்தில
அம்மா நீயும் துடிச்ச துடி
இன்னும் எனக்கு மறக்கலடி

மண்னோடு மண்ணாக 
நான் புரண்டு கிடக்கயில
மாதா உன் கஸ்டத்திலும்
மனநோகா என்னனச்சி
துயரில்லா துப்பராக்கி
தூது விட்டால்
அக்கம் 
பக்கம்
என்
அம்மா
தொகுப்பு
ரா.சுபாஷ்
 
 

 
கொஞ்சம் முயற்சி செய்வோமே....!


வேர்ட்டில் நாம் ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான அர்த்தமும்
மாற்றுச்சொல்லும் கண்டு கொள்ளலாம். ஆனால் வேர்ட்டை
திறக்காமலேயே வெளியில் இருந்து ஆங்கில வார்த்தை
களுக்கு சரியான  அர்த்தம் இந்த சாப்ட்வேர்
 மூலம்நாம் எளிதில் அறிந்து கொள்ளலாம். 7.5 எம்.பி.
 கொள்ளளவு கொண்டஇந்த சாப்ட்வேரை டவுண்லோடு
செய்ய இங்கு கிளிக் செய்யவும். நாம் டவுண்லோடு
 செய்து பின்னர் கணிணியில்இன்ஸ்டால் செய்துகொள்ள
வேண்டும். அதை இன்ஸ்டால் செய்யும்சமயம் நமக்கு 
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமக்கு தேவையான தேசத்தின் மொழியை தேர்வு செய்து 
கொள்ளலாம். நான் ஆசியா தேசத்தை தேர்வு செய்துள்ளேன். 
பின்னர்இன்ஸ்டால் செய்யவும். இதை செய்து முடித்ததும்
 உங்களுக்கு இந்தசாப்ட்வேரானது டாக்ஸ்க்பாரில் வந்து
 அமர்நது கொள்ளும்.
இதில் உள்ள வேர்ட் வேப் கிளிக் செய்தவுடன் உங்களுக்கு
 கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் நமக்கு அர்த்தம் தேவைபடும் வார்த்தையை
 Lookup in என்கின்றகட்டத்தில் தட்டச்சு செய்து Search
கொடுக்கவும். நான் Verify என்கின்றவார்த்தையை தட்டச்சு
 செய்துள்ளேன். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இந்த வார்த்தைக்கு Nearest வார்த்தைகள்  நமக்கு கிடைக்கும்.
 அதேசமயம் நமக்கு அதன் சரியான அர்த்தமும் கிடைக்கும்.
 மேலும் கீழே உள்ளSynonyms  கிடைக்கும்.
 இதில் உள்ள இதர Tab-களையும் பாருங்கள்.
The related word tabs show the following types of related 
words when available:
Synonyms
Words which mean the same in some context
e.g. close is a synonym of shut.
Antonyms
Words meaning the opposite in some context
e.g. big is an antonym of little
 See Also
Mostly related word forms and compounds
e.g. cut gives see also cut off, cutter, etc.
 Type of
Shows less specific words.
e.g. a comedy is a type of play
 Types
Shows more specific words.
e.g. flower has daisy as one of its types
 Parts
Shows words for part of an object
e.g. tree is one of the parts of a forest
 Part of
Shows words for a collection or the whole
e.g. bumper is a part of a car
 Similar
Words with meanings that are close
e.g. big is similar to huge


இதில் உள்ள பாண்ட் அளவுகளையும் நாம் மாற்றிக் 
கொள்ளலாம்.கீழே உள்ள படத்தை பாருங்கள்
இதில் உள்ள வார்த்தைக்கு சரியான உச்சரிப்பை கேட்க
இதில் உள்ள ஸ்பீக்கர் பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். ஓ.கே. கொடுத்தால்
உங்களுக்கு அதன் சரியான உச்சரிப்பு கேட்கும்.
  
இதன் Hot Key கொண்டுவர  Options சென்று Hot Key யை
கிளிக் செய்யவும்.
பயன் படுத்திப் பாருங்கள்.கருத்தினை கூறுங்கள்.

புகைப்பட எபெக்ட்


புகைப்படங்களை விதவிதமான எபெக்ட்டுக்களில் கொண்டுவர நமக்கு போட்டோஷாப் சாப்ட்வேர் தேவை. ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் போட்டோஷாப்பில் செய்யும் விதவிதமான எபெக்ட்டுகளை கொண்டுவரலாம். 186 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக்செய்யவும்.

 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். இதில் உள்ள ஓப்பன் இமெஜ் என்பதனை கிளிக் செய்து தேவையான புகைபடத்தினை தேர்வு செய்யவும்.

இதன் மேற்புறம் 12 விதமான எபெக்ட்டுகள் உள்ளது. நமக்கு தேவையான எபெக்ட்டினை தேர்வு செய்யவும். 

 ஒவ்வொரு எபெக்ட் மேல்புறமும் அதற்கான செட்டிங்ஸ் இருக்கும்.. அதனை கிளிக் செய்து நமக்கு எந்த அளவு அதன் எபெக்ட்தேவையோ அதனை செலக்ட் செய்துகொள்ளுங்கள்.

இந்த எபெக்ட் மூலம் பிளாக் அனட் ஒயிட் படம் கொண்டுவந்துள்ளேன்.

 மற்றும் ஒரு புகைப்படம்.

 விதவிதமான கலரில் எபெக்ட் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-

தேவையான மாற்றங்கள் செய்தபின் இதனை தனியே சேமிக்கும் வசதி உள்ளது. நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Share |

Get Live Score