தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

எனது அம்மா.......!

எனது அம்மா.......!

அம்மா என்னை பத்துமாதம் சுமக்க
நீ பட்டபாடு கொஞ்சமில்ல..
நான் பட்டினிருக்க கூடாதென
பார்த்து பார்த்து உண்ணுகிட்ட

நீ கஸ்டப்பட்டு வேலசெய்த
நான் கரு‌வரையில பார்த்திருந்தேன்
நீ தண்ணீர் தூக்கி போகயில
நோகுதுனு சொல்லிருந்த
என் கைகள் அங்கு நீளமில்ல
அம்மா உனக்கு உதவிசெய்ய....!

நாலு ரொம்ப ஓடுதடி அம்மா...
நான் பிறக்கும் காலத்திற்கு
வயிற்ற பிடிச்சி கத்தயில..
அம்மா என் ரெத்த நாளம்
கொதிச்சதடி..!

கொட்டும் மழை விடிய
கோழியும் தான் கூவ முன்னே
அம்மா என்ற பேரொலியில் - என்னை
பெற்றெடுத்தாள் என்தாயி

நான் பிறக்கும் நேரத்தில
 யாரும்மில்ல பக்கத்தில
அம்மா நீயும் துடிச்ச துடி
இன்னும் எனக்கு மறக்கலடி

மண்னோடு மண்ணாக 
நான் புரண்டு கிடக்கயில
மாதா உன் கஸ்டத்திலும்
மனநோகா என்னனச்சி
துயரில்லா துப்பராக்கி
தூது விட்டால்
அக்கம் 
பக்கம்
என்
அம்மா
தொகுப்பு
ரா.சுபாஷ்
 
 

 
Share |

Get Live Score