தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

படித்ததில் சுவைத்தது

<span title=
கோடிகணக்கில் பணத்தை செலவு செய்து திரைப்படத்தை
எடுப்பவர்கள் படம் நல்ல ரிசல்ட் வரும்வரை சரியாக
தூங்க மாட்டர்கள். அவர்கள் மனம் நிலைகொள்ளாது. அதை போல்
நமது பதிவுலக நண்பர்களும். அவரவர் பதிவுகளுக்கு எவ்வளவு
ஓட்டுக்கள் வந்துள்ளது. கருத்துக்கள் எத்தனை வந்துள்ளது.
முன்னணி பதிவில் வந்துவிட்டதா? என நல்ல ரிசல்ட் வரும்வரை
தவிக்கின்றனர்.

சரி இதற்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம்? நமது பதிவில்
வாசகர்கள் தமது கருத்துக்களை பதிவிடும் போதே கருத்துக்கள் நமது மெயிலுக்கும்- மெயிலிருந்து நமது செல்போனுக்கும் வருமாறு
செய்யலாம். முதலில் மெயிலிலிருந்து செல்போனுக்கு தகவல்
வருமாறு செய்துக்கொள்ளுங்கள். மெயிலிலிருந்து செல்போனுக்கு
தகவல் வருவது பற்றி அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்.


இப்போது நமது செல்போனுக்கு கருத்துரைகள் வருமாறு செட்
செய்வதைப்பார்க்கலாம். முதலில் உங்கள் பிளாக்கரின் டாஷ்போர்ட்-
அமைப்புகள்-கருத்துரைகள்-கருத்துரை அறிவிப்பு மின்னஞ்சல் -
எதிரில் உள்ள கட்டத்தில் உங்கள் இ-மெயில்முகவரியை
தட்டச்சு செய்து அமைப்புகளை சேமி- அழுத்தி வெளியேறுங்கள்.
கீழ் கண்ட படத்தை பாருங்கள்.

அவ்வளவுதான். இனி உங்களுக்கு பதிவில் கருத்துக்கள் வரும்போது
உங்களுடைய செல்போனுக்கு கருத்துக்கள் வரஆரம்பிக்கும்.

"கெட்டப்பழக்கம் ஏதும் இல்லாதது எனது கெட்டப்பழக்கம் " என
என்னைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதற்கு எனது சகோதரர் என்னிடம்
இருப்பதிலேயே கெட்ட பழக்கம் பதிவில் பதிவிடுவது.
ஒட்டுக்கள் வந்ததா என பார்ப்பது. கருத்துக்கள் என்ன என்ன வந்தது
என் பார்ப்பது...இவைகளை எதிர்பார்ப்பது கெட்டபழக்கம் தானே...
நண்பர் ஓருவர் பதிவிட்டு விட்டு அவசரமாக வெளியூர் சென்று
விட்டார். மணிக்கொருமுறை போன் செய்து -எவ்வளவு ஓட்டு
வந்துள்ளது - கருத்துக்கள் வந்துள்ளதா - யார் யார் கருத்து சொல்லி
உள்ளார்கள் - என்ன கருத்தினை சொல்லியுள்ளார்கள் என என்னிடம்
இணையத்தில் பார்த்து சொல்லசொல்லி கேட்டார். அப்போதுதான்
செல்போனில் கருத்துக்கள் வந்தால் எப்படி இருக்கும் என்கிற
எண்ணம் வந்தது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு.

பதிவை பற்றி நண்பர் எழுதியுள்ள. இந்த பதிவையும் பாருங்கள்

பதிவினை பாருங்கள். பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்கள்.

படித்ததில் சுவைத்தது டெக்டோப்பில் உலகம்

உலகில் எத்தனை நாடுகள் உள்ளன,எத்தனை நகரங்கள் உள்ளன,அவற்றின் மக்கள் தொகை,ஒரு நாட்டிற்கும் மற்றோரு நாட்டிற்கும் இடையில் உள்ள தொலைவு,பகலில் உலகின் தோற்றம் - இரவில் உலகின் தோற்றம் என அனைத்தும் இந்த சாப்ட்வேரில் உள்ளது. தாய்நாட்டினை விட்டு பணியின் காரணமாக வெளியில் வேலை செய்யும் நண்பர்கள் தங்கள் நாட்டிலிருந்து பணிசெய்யும் நாடுவரை உள்ள தொலைவை சுலபமாக தெரிந்துகொள்ளலாம். இந்த சாப்ட்வேரை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு வி்ண்டோ ஓப்பன் ஆகும். இதில் மேல்புறம் கீழ்கண்ட மெனுபார் இருக்கும்.
இதில் நாடுகளை தேர்வு செய்யவும். மொத்தம் 270 நாடுகளின் பட்டியலும் அதன் Longitude - Latitude - மற்றும் அதன் மொத்த பரப்பளவும் மக்கள் தொகையும் இதில் விவரமாக கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அடுத்து நகரம் இதில் மொத்தம் 33,000 நகரங்களின் விவரங்கள் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
மெனுபாரினை கிளிக் செய்ய உங்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும் தேவையானதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
இரவில உலகின் தோற்றம் படம் கீழே:
பகலில் உலகின் தோற்றம் கீழே:-
நீங்கள் உலகின் எந்த இடத்தில் வைத்தாலும் அந்த இடத்தின் பெயர்,மக்கள் தொகை,என அனைத்துவிவரங்களும் நமக்கு கிடைக்கும். அதுபோல நாம் வேலை செய்யும்  இடத்திற்கும் நமது சொந்த நாட்டிற்கும் இடையில் உள்ள தொலைவின் கிலோமீட்டரையும் எளிதில் அறிந்துகொள்ளலாம்.நாம் வேலைசெய்யும் இடத்தை மவுஸால் கிளிக்செய்து பின்னர்நமது இல்லம் இருக்கும் இடத்தை கிளிக்செய்தால் இடைப்பட்ட தொலைவு எவ்வளவு கிலோமீட்டர் என தெரியவரும்.பதிவினை
அன்பின்
சுபாஷ்


Share |

Get Live Score