தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

மழலை செல்வங்களே உங்களுக்காக


1 வயது மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு பொருட்கள்.உணவுகள்.வாகனங்கள்.விலங்குகள்.பறவைகள் என படத்துடன் விளக்கி அது எழுப்பும் சத்தத்தையும் எளிதில் புரியும் வண்ணம் சொல்லித்தந்தால் எளிதில் அவர்கள் அதைப்பற்றி அறிந்துகொள்ளுவார்கள். அவர்களின் அறிவு மேம்படும்.4 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.பதிவிறக்கம் செய்து ்இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் விதவிதமான படங்கள் உள்ளது.ஒலி எழுப்பக்கூடிய பொருட்களின் ஒலிகளும்இதில் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒவ்வாரு பொருளாக கிளிக் செய்ய உங்களுக்கு அதன் ஒலி கேட்கும்.ஆடு கத்துவது.கார் ஒடுவது.பறவைகள் ஒலி.சிங்கம் கர்ஜனை என விதவிதமாக உள்ளது. இதில் உள்ள வற்றை தவிர நாமே சொந்தமாக படங்களையும் ஒலிகளையும் சேர்க்கலாம். அதற்கு நீங்கள் இந்த சாப்ட்வேரை எஙகு இன்ஸ்டால் செய்துள்ளீர்களோ அந்த டிரைவில் உள்ள Programme File -ஐ ஓப்பன்செய்துகொள்ளுங்கள். அதில்உள்ள 100 dof_toddler slides - data sets -sample images and sounds - wpelipart என முறையே திறந்துகொள்ளுங்கள்.
உங்களுக்க கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் .PNG பைலாகஉங்கள் குழந்தையின் படத்தை பெயர்கொடுத்து  சேமித்துக்கொள்ளுங்கள்.அதைப்போலவே இதில் உள்ள Partnersinrhyme என்பதில் குழந்தையின் சிரிப்பு ஒலி , அழுகை ஒலி, பேசும் மழலை மொழி என்பதை .wav பைலாக சேமித்துக்கொள்ளுங்கள்.
இப்பொது மெயின் விண்டோவினை திறந்து கொள்ளுங்கள். அதில் உங்கள் குழந்தையின் பெயரை கிளிக் செய்ய உங்களுக்கு குழந்தையின் படம் ஓப்பன் ஆகும். கூடவே குழந்தையின் மழலை மொழியையும் கேட்கலாம்.படத்தில் குழந்தை `ஹாஜர்......
படத்தை .PNG  ஆக மாற்ற போட்டோஷாப்பில் படத்தை திறந்து கொண்டு அதை சேவ்அஸ் save as கொடுத்து வரு்ம் விண்டோவில் .PNG பைலாக சேமிக்கவும். அதைப்போல குழந்தையின் மழலை மொழியை .wav பைலாக மாற்றிக்கொள்ளுங்கள்.குழந்தையின் அழுகை.சிரிப்பு, பேசுவது என ஒவ்வொன்றையும் தனிதனி படங்களில் சேமிதது அவர்களை கேட்க சொல்லி நாமும் மகிழலாம்.
பயன்படுத்திப்பாரு்ங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.

கணிதப்பாடம் (படித்ததில் சுவைத்தது)

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கணக்கிணை சுலபமாக போட மற்றும் ஒரு சாப்ட்வேர் இது.2 எம்.பி.க்குள் உள்ள இலவச சாப்ட்வேரான இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Percent Correct கீழே உள்ள ஸ்லைடரை நகர்த்தி நேரத்தை நாம் சுலபமாக செட்செய்திடலாம். ஒவ்வோரு பெருக்கல் கணக்கிற்கும் நாம் விடை காணவேண்டும். இதைப்போலவே கூட்டல். கழித்தல். பெருக்கல். வகுத்தல் கண்க்குகள் உள்ளது. இடது புறம் உங்களுக்கு வரிசையாக பட்டன்கள் இருக்கு்ம்.தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
நான் வகுத்த ல் கணக்கினை தேர்வுசெய்துள்ளேன்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
 இதில் ஏழாவதாக உள்ள டேபை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகு்ம்.
இதில் வட்டத்தினுள் உள்ள தேவையான எண்ணை பயன்படுத்தி இறுதி வட்டத்தில் உள்ள எண்ணிக்கையை வரவழைக்க வேண்டும். இதைப்போலவே இறுதியில் உள்ள Square கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வலது புறம் எண்ணிக்கைகள் கீழே உள்ள எண் ணிக்கைகள் சரியாக வரவேண்டும். பார்க்க சுலபமாக தோன்றினாலு்ம் சற்று கடினமாகவே உள்ளது. வலமிருந்து இடம் வரு்ம் கூட்டுத்தொகை மேலிருந்து வரும் கூட்டுத்தொகை வித்தியாசம் வருகின்றது. சற்று முயற்சித்தால் சரியான விடைவருகின்றது.விளையாடி பாருங்கள்.
முயற்சி திருவினையாக்கும்.

குழந்தைகளை வரைய பழக்குவோமா..

விடுமுறை விட ஆரம்பித்துவிட்டார்கள். குட்டி குழந்தைகள் இனி வீட்டில் சும்மா இருக்கமாட்டார்கள்.விதவிதமாக சுவரில் படங்களை வரைந்துவைப்பார்கள்.அவர்கள் சுவரில் விதவிதமாக படங்களை வரையாமல் கணிணியில் வரைய இந்த சின்ன சாப்ட்வேர் உதவும்.20 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஓப்பன் புக் என்னும் டேபை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள படத்தை தேர்வு செய்து அருகில் உள்ள டிக் மார்க்கை கிளிக் செய்யுங்கள்.
புகைப்படம் ரெடி.இப்போது ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நிறத்தை நிரப்பவும். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
நீங்கள் வண்ணங்களை நிரப்ப உங்களுக்கு பக்கெட் டூல் .கிரையான் டூல்கள் உள்ளது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் Songs என்னும் டேபை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள 6 பாடல்களில் எதை கிளிக் செய்கின்றோமோ அதற்கேற்ப பாடல் நமது கர்சர் மூவ்க்கு ஏற்ப ஒலிக்க ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு பாடலுடன் படம் வரைவது மகிழ்ச்சியை அளிக்கும்.
இதில் ஸ்டாம்ப் டூலும் உள்ளது. விதவிதமான ஸ்டாம்ப் கொண்டுவருவதுடன் விதவிதமான அளவிலும் கொண்டுவரலாம்.
விலங்குகள் என எடுத்துக்கொண்டால் விதவிதமான விலங்குகள் உள்ளது.ஒவ்வொன்றையும் கலர்கொடுத்து மகிழலாம்..அதைப்போல ஏஞ்சல் என எடுத்துக்கொண்டால் விதவிதமான தேவதைகள் படங்கள் கிடைக்கும். அனைத்தையும் கலர்கொடுத்து மகிழலாம். சேமிக்கலாம்.பிரிண்ட் எடுத்துகொள்ளலாம்.அப்புறம் என்ன - குழந்தைகளுக்கு டவுண்லோடு செய்து விளையாட கொடுங்கள.நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.;

வீடியோ பாடல் டவுன்லோட் செய்ய


முதலில் நீங்கள் Real one Player என்கின்ற பிளேயரை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அதன் முகவரி தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.இப்போது பழைய தமிழ் வீடியோ பாடல்கள் தளம் செல்லவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் நீங்கள் பதிவிறக்க விரும்பும் பாடல்மீது கர்சரை வைத்து கிளிக் செய்யவும்.நான் அன்பே வா பாடலை கிளிக் செய்துள்ளேன்.இப்போது வீடியோ ஓட ஆரம்பிக்கும். அப்போது உங்களது வீடியோ மூலையில் Download This Video என்கின்ற பாப்அப் மெனு கிடைக்கும். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
அதை கிளிக் செய்ததும் உங்களுக்கு உங்களது பாடல் டவுண்லோடு ஆக ஆரம்பிக்கும்.
டவுண்லோடு முடிந்ததும் மை டாக்குமெண்ட்ஸ், மைவீடியோ வில் சென்று பார்த்தால உங்களுக்கான வீடியோ படம் அங்கு காத்திருக்கும்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
என்றும் அன்பின்
சுபாஷ்

கம்யூட்டர் தானே ஷெட்டவுண் ஆக. படித்ததில் சுவைத்தது



சில நேரங்களில் நாம் அவசரமாக வெளியில் செல்லவேண்டி வரலாம்.டவுண்லோடுக்கு சாப்ட்வேரோ - திரைப்படங்களோ - பாடல்களோ -டவுண்லோடு செய்துகொண்டிருப்போம். அது டவுண்லோடு ஆகும் வரை நம்மால் கம்யூட்டருடன் இருந்து அதை ஷெட்டவுண் செய்ய முடியாது.அந்த மாதிரியான சமயங்களில் நமக்கு கைகொடுக்க வருகின்றது இந்த குட்டி சாப்ட்வேர். 600 கே.பி. அளவுள்ள இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் 15 நிமிடத்திலிருந்து 6 மணி நேரம் வரை கம்யூட்டர் தானே ஷெட்டவுண் ஆகும் நேரத்தை இதில் உள்ள ஸ்லைடரை நகர்ததுவது மூலம் செட் செய்யலாம்.

 இப்போது இதில் உள்ள ஸ்டார்ட் கிளிக் செய்தால் உங்களுக்கு கவுண்டவுண் ஆரம்பிக்கும்.
நீங்கள் குறிப்பிட்ட நேரம் வந்ததும் கம்யூட்டர் தானே ஆப் ஆகிவிடும். சின்ன கல்லு -பெத்த லாபம்-என பஞச தந்திரம் படத்தில் ஒரு வசனம் வரும் .அதுபோல் சின்ன சாப்ட்வேர் -அதிக பலன் கொடுக்கின்றது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை தெரிவியுங்கள்
அன்புடன்
சுபாஷ்

படித்ததில் சில உங்களுக்கு தினமும் ஜாதகப்பலன்கள்



கடந்தவாரம் குருபெயர்ச்சி - தொடர்நது ராகு -கேது பெயர்ச்சி என எல்லோரும் பெயர்ச்சிபலன்கள் பார்த்தனர் நாமும் ஏதாவது ஜோதிடசம்பந்தமாக போடலாம் என்று இந்த சின்ன சாப்ட்வேரை இங்கு பதிவிடுகின்றேன்.10 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள் இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வரும் விண்டோவில் தேவையானதை தேர்வு செய்யுங்கள்.
வரும் விண்டோவில் ஜாதக கட்டத்தினை வடஇந்திய ஸ்டைலிலோ - தென் இந்திய ஸ்டைலையோ முடிவு செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில உள்ள டேப்பில் எது தேவையோ அதனை கிளிக்செய்யுங்கள்.
அன்றைய பஞசாங்க விவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். இது குழந்தை பிறப்பு முதல் பூப்படைவது வரை பயன்தரும்.வேறு முக்கிய நிகழ்வினையும் குறிந்துகொள்ள அன்றைய பஞசாங்கம் பலன்தரும்.
பிறக்கும்போது எந்தஎந்த கிரகங்கள் எந்த எந்த இடங்களில் இருந்தது என்பதை அறிந்துகொள்ளலாம்.
முந்தைய தேதிபற்றி நமக்கு விவரங்கள் வேண்டுமானாலும் அதில் வலது மூலையில் உள்ள காலண்டரை தேர்வு செய்வது மூலம் அறிந்துகொள்ளலாம்.
அந்த தேதியில் உள்ள ஜாதககட்டத்தினையும் எளிதில கொண்டுவரலாம்.
சாதாரணமாக நாம் ராகுகாலம் என்றால் காலை 7-30 மணி முதல் 9 மணி வரை என குறிப்பிடுவோம். ஆனால் இந்த சாப்ட்வேரில் நிமிடங்கள் வித்தியாசமாக வருகின்றது. நீங்கள் ராகுகாலம் - எமகண்டம் பார்த்து நல்ல காரியம் செய்பவராக இருந்தால் இந்த சாப்ட்வேரை உபயோகிக்கலாம்.

கணனியின் வேகத்தை அதிகரிப்போமா

நமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில்
துவங்கும். சிலர் கணிணியை ஆன் செய்துவிட்டு டீ சாப்பிட்டுவர
சென்றுவிடுவர். அவர்கள் டீ சாப்பி்ட்டுவருவதற்கும் கணிணி ஆன்
ஆகி இருப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும். கணிணி அவ்வாறு
மெதுவாக இயங்க என்ன காரணம்.?
சில சாப்ட்வேர்களை நாம் இன்ஸ்டால் செய்யும் போது அந்த
மென்பொருள்களின் ஐகான்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள டாஸ்க்பாரின்
வலது பக்க மூலையில் அமர்ந்துவிடும். இவ்வாறு தேவையில்லாத
மென்பொருள்கள் நமது கம் யூட்டர் பூட் ஆகும் போது விண்டோஸ்
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தோடு லோடு ஆவதால் கணிணி பூட் ஆவதற்கு
அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனை எவ்வாறு தவிர்க்கலாம்
என இப்போது காணலாம்.
முதலில் டெஸ்க்டாப்பிலுள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக்
செய்து ரன் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். அதில் msconfig என
தட்டச்சு செய்து ஓ.கே. கொடுங்கள். விளக்கப்படம் கீழே:-

இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் ஆறாவது காலத்தில் உள்ள Startup கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இப்போது வரும் Startup விண்டோவில் உங்களுக்குஎந்த
மென்பொருள் விண்டோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் லோடு ஆக
வேண்டுமோ அதை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை Disenable
செய்து விடுங்கள். Apply செய்து ஓ.கே. கொடுங்கள்.

இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

ரீ -ஸ்டார்ட் கொடுங்கள். இப்போது உங்கள் கணிணி வேகமாக
செயல்படுவதை காண்பீர்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன்
முடிக்கின்றேன். இன்னும் தேவையில்லாதவற்றை எல்லாம்
எப்படி நீக்குவது பற்றி பின்னர்பார்க்கலாம்.

3D

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.

இன்றைய இணையத்தளம் அறிமுகம் பகுதிக்காக உங்களுக்கு அறிமுகம் செய்யப் போகும் இந்த இணையத்தளம் மருத்துவ பீட மாணவர்களுக்கும் வரும் காலங்களில் மருத்துவம் கற்க இருக்கும் மாணவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

ஒவ்வரு மனித உடலிலும் உள்ள அம்சங்களை அறிய வேண்டும் என்றால் நாம் ஆய்வுகூடம் ( Lap )அல்லது மருத்துவக் கண்காட்சிகளில்தான் ( Medical exhibition ) அறிய வேண்டும் ஆனால் இங்கு எல்லாம் செல்வதற்க்கு நேரம் இல்லை என்பவர்களுக்கு முப்பரிணாம ( 3D ) அடிப்படையில் சகல விளக்கங்களுடனும் மற்றும் உங்களுக்கு விரும்பிய முறையில் மனித உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் 360 பாகையில் சுற்றி பார்க்கும் வகையில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தின் பெயர்தான் Bio Digital Human : Explore the Body in 3D

திருமண பொருத்தம் பார்ப்போமா....



 எம்,ஜீ.ஆர் .ரகசிய போலீஸ் 115 என்கின்ற படத்தில் பாடும் படலான:- என்ன பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம்...ஆஹா...என்ன பொருத்தம் ....பாடல் வரிக்கு தகுந்தாற் போல .ஆண் - பெண் இருவரின் ஜாதகம் பொருத்தம் திருமணத்திற்கு முன்னரும் திருமணத்திற்கு பின்னரும் பார்க்க இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும். 2 எம்.பிக்குள் உள்ள இதை உபயோகிப்பது மிகவும் எளிது.பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுபவர்களும் - மாப்பிள்ளைக்கு பெண் தேடுபவர்களும் இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும. சில சமயம் நம்மிடம் மொத்தமாக ஜாதகம் வந்துசேர்ந்துவிடும்.ஒவ்வோன்றையும் ஜோதிடரிடம் காண்பித்து பொருத்தம் பார்க்க பணம் மற்றும் நேரம் செலவழிப்பதை விட இந்த சாப்ட்வேரில் பெண்ணின் பெயர் - ராசி - நட்சத்திரம். அதுபோல் பையனின் பெயர் - ராசி - நட்சத்திரம் இதில் கொடுத்தால் சில நிமிடங்களில் ஜாதகம் பொருந்தும் - பொருந்தாது என ரிசல்ட் வந்துவிடும்.ரிசல்ட் பார்த்து திருமணம் ஆகாதவர்கள் மட்டும்- திருமணத்திற்கு ஏற்பாடு செய்யலாம்.இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இதை டவுண்லோடு செய்ததும் உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன ஆகும். 

இதில் Horoscope Match என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் பெண் பெயரை தட்டச்சு செய்யவும்.
அடுத்து உள்ள ராசியில் நீங்கள் பெண்ணின் ராசியை தேர்வு செய்யவும்.
அடுத்து நட்சத்திரம் தேர்வு செய்யவும்.
இதைப்போல் ஆண் விவரங்களையும் தேர்வு செய்து அதில் உள்ள  பிரிண்ட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விவரம் தெரியவரும். இதில நீங்கள் பொருத்தம் பார்க்கலாம்.அனைத்து பொருந்ததங்களும் பொருந்துகின்றதா என்பதை அதில் உள்ள டிக் அடையாளத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம். 12 பொருத்தங்களில் எத்தனை பொருந்துகின்றது என இறுதியில் விவரம் பார்க்கலாம்.

பெண்ணின் நட்சத்திரத்திற்கு பொருத்தமானஆண் ராசி பலன்களையும் இதன் மூலம் பார்க்கலாம்.
இதைப்பொல் ஆண் வரனுக்கு பொருந்திவரக்மகூடிய பெண் நட்சத்திர  விவரங்களையும் காணலாம்.

விதவிதமாய்-வித்தியாசமாய் ரிங்டோன்கள்



சிலர் செல்போனில் விதவிதமாக ரிங்டோன்கள் - மெசேஜ்
டோன்கள் வைத்திருப்பார்கள். அவர்களுக்காகவே இநத
தளம் உள்ளது. இதில் 3,18,538 -க்கும் மேற்பட்ட ரிங்
டோன்கள் வெவ்வேறு கேட்டகிரியில்(Categories) உள்ளது.
புகழ்பெற்ற பாடல்கள்,செந்தில் கவுண்டமணி காமெடிகள்,
வடிவேலு காமெடிகள்,குழந்தைகளின் சிரிப்புகள்,குழந்தையின்
அழுகுரல்கள்,நகைச்சுவையான இசைதொகுப்புகள் என
நமக்குவேண்டிய கேட்டகிரியை(Categories) தேர்வுசெய்து
வேண்டியதை -விரும்பியதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த தளம் செல்ல முதலில் இங்கு கிளிக் செய்யவும்.

உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் உள்ள பிளே பட்டனை கிளிக் செய்து பாடலை முதலில்
முன்னோட்டம கேளுங்கள். உங்களுக்கு பாடல்- காமெடி வசனம்
-ரிங் டோன் -பிடித்திருந்தால் இதன் கீழ் உள்ள Get Ringtone கிளிக்
செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள PC DOWNLOAD கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓன்று ஓப்பன் ஆகும்.


இதன் கீழ் புறத்தில் உள்ள Start Download கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு நீங்கள் ரிங்டோனை எந்த டிரைவில் சேமிக்க
போகின்றிர்களோ அந்த டிரைவை தேர்ந்தேடுங்கள். பிறகு
சேமியுங்கள்.
இப்போது உங்கள் விருப்பபாடல் உங்கள் கணிணியில்
இருக்கும். அதிலிருந்து நீங்கள் உங்கள் மொபைலுக்கு
டேட்டா கேபிள் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.
பதிவை பாருங்கள்.பிடித்திருந்தால் மறக்காமல்
ஓட்டுப்போடுங்கள்.

விதவிதமான போட்டோப்ரேம்கள்.



இணைய நண்பர் போட்டோ ஸடுடியோ ஆரம்பித்து உள்ளார். அவருக்கு விதவிதமான ப்ரேம்கள் தேவை என்று சொன்னார். அவருக்காகவும் உங்களுக்காகவும் நான் 25 வகையான ப்ரேம்களை இங்கே பதிவிட்டுள்ளேன். 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய   இங்கு கிளிக் செய்யவும்.

இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவது மூலம் நீங்கள் விதவிதமான ப்ரேம்களை காணலாம். தேவையானதை தேர்வு செய்யுங்கள். அடுத்து உங்கள் கணிணியில் இருந்து தேவையான புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.
மற்றும் ஒரு டிசைன் படம் கீழே-
இதிலேயே நாம் ஸ்லைட் ஷோவும் கொண்டுவரலாம்.தனியே படத்தை சேமிக்கும் வசதி இல்லாததால் இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சேமிக்கலாம்.

(படித்ததில் சுவைத்தது )டெக்ஸ்டாப்பில் 22 தோற்றங்கள்



டெக்ஸ்டாப்பில் தண்ணீர்வரவழைப்பது,கரப்பான் பூச்சியை ஓடவிடுவது,தீ பிடிக்க வைப்பது, டெக்ஸ்டாப்பில் விளையாட்டு என பல பதிவுகளை இதறகு முன் பார்த்தோம். இனறைய பதிவில் டெக்ஸ்டாப்பில் விதவிதமாக 22  தோற்றங்கள்(Effect) எப்படி கொண்டுவருவது என பார்க்கலாம். இது மிகவும் சின்ன சாப்ட்வேர்..32 கே.பி.தான். நீங்கள் டெக்ஸ்டாப்பில் இந்த வசதிகளை பெற இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு சின்ன ஐ-கான் வரும். அதை கிளிக்செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஓவ்வோரு Effect(எபக்ட்) டையும் நீங்கள் கிளிக் செய்து கீழே உள்ள Play(பிளேவை) அழுத்தினால் உங்கள் டெக்ஸ்டாப் விதவிதமாக மாறுவதை காணலாம்.சில மாறுதல்கள் கீழே:-
மற்றும் ஓரு மாறுதல்:-
அடுத்தது:-
அதற்கடுத்தது:-
மற்றும் ஒரு எபக்ட்:-
உபயோகித்துப்பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.
Share |




Get Live Score