தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

வீடியோ பாடல் டவுன்லோட் செய்ய


முதலில் நீங்கள் Real one Player என்கின்ற பிளேயரை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அதன் முகவரி தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.இப்போது பழைய தமிழ் வீடியோ பாடல்கள் தளம் செல்லவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் நீங்கள் பதிவிறக்க விரும்பும் பாடல்மீது கர்சரை வைத்து கிளிக் செய்யவும்.நான் அன்பே வா பாடலை கிளிக் செய்துள்ளேன்.இப்போது வீடியோ ஓட ஆரம்பிக்கும். அப்போது உங்களது வீடியோ மூலையில் Download This Video என்கின்ற பாப்அப் மெனு கிடைக்கும். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
அதை கிளிக் செய்ததும் உங்களுக்கு உங்களது பாடல் டவுண்லோடு ஆக ஆரம்பிக்கும்.
டவுண்லோடு முடிந்ததும் மை டாக்குமெண்ட்ஸ், மைவீடியோ வில் சென்று பார்த்தால உங்களுக்கான வீடியோ படம் அங்கு காத்திருக்கும்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
என்றும் அன்பின்
சுபாஷ்

Share |

Get Live Score