தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

விதவிதமான போட்டோப்ரேம்கள்.இணைய நண்பர் போட்டோ ஸடுடியோ ஆரம்பித்து உள்ளார். அவருக்கு விதவிதமான ப்ரேம்கள் தேவை என்று சொன்னார். அவருக்காகவும் உங்களுக்காகவும் நான் 25 வகையான ப்ரேம்களை இங்கே பதிவிட்டுள்ளேன். 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய   இங்கு கிளிக் செய்யவும்.

இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவது மூலம் நீங்கள் விதவிதமான ப்ரேம்களை காணலாம். தேவையானதை தேர்வு செய்யுங்கள். அடுத்து உங்கள் கணிணியில் இருந்து தேவையான புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.
மற்றும் ஒரு டிசைன் படம் கீழே-
இதிலேயே நாம் ஸ்லைட் ஷோவும் கொண்டுவரலாம்.தனியே படத்தை சேமிக்கும் வசதி இல்லாததால் இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சேமிக்கலாம்.
Share |

Get Live Score