தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

Screen Saver-ஸ்கிரீன் சேவரில் வீடியோ வரவழைக்க

ஸ்கிரீன் சேவரில் நாம் புகைப்படங்களை மாற்றுவதை பார்த்துள்ளோம். அதைப்போல புகைப்படங்களுடன் இசையையும் ஒலிப்பதை பார்த்துள்ளோம். ஆனால்இந்த சாப்ட்வேரில் ஸ்கிரீன் சேவராக வீடியோ படம் ஓடுவதை காணலாம்.இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.3 எம்.பி. கொள்ளளவு உள்ள இது இலவச சாப்ட்வேரே..இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு டாக்ஸ்பாரில் கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
இதில் உள்ள Settings கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும். இதில் கம்யூட்டர் எவ்வளவு நேரம் காத்திருந்தால் உங்களுக்கு வீடியோ வரவேண்டுமோ அந்த நேரத்தை குறிப்பிடவும்.ஒலியையும் மீண்டும் கணிணி இயல்பு நிலைக்கு திரும்புவதையும் இதில செட் செய்திடலாம்.
டாக்ஸ்க்பாரில் உள்ள Main என்பதனை கிளிக்செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் வீடியோ உள்ள போல்டரை தேர்வு செய்துகொள்ளலாம். அதைப்போல ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோ போல்டர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
நீங்கள் செட் செய்த வீடியோவானது குறிப்பிட்ட நேரம் நீங்கள் கம்யூட்டருக்கு எந்த வேலையையும் கொடுக்காமல் இருந்தால் ஸ்கிரீன்சேவராக வீடியோ படம் ஓட ஆரம்பிக்கும்.
Share |

Get Live Score